The Indian Times

விடுதலை கதாநாயகியின் கலக்கல் புகைப்படங்கள் இதோ

நடிகர் மற்றும் இசையமைப்பாளர் என தமிழ் சினிமாவை கலக்கி வருபவர் ஜிவி பிரகாஷ்,இவரது இசைக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.2006 ஆம் ஆண்டு வெளியாகிய வெயில் படத்தின் மூலம் சினிமாவுக்கு இசையமைப்பாளராக அறிமுகம் ஆகியவர் இவர்.

இவரின் தங்கை தான் நடிகை பவானி ஸ்ரீ.இவருக்கு நடிப்பில் மேல் நாட்டமில்லை இவரது முழு கவனமும் இயக்குனர் ஆக வேண்டும் என்பதுதான்.இதனால் சினிமாவில் உதவி இயக்குனராக பணியாற்ற தொடங்கினர்.

Advertisement

2015 ஆம் ஆண்டு இது என்ன மாயம் என்ற படத்தில் உதவி இயக்குனராக சினிமாவில் அடியெடுத்து வைத்தார்.

இப்படத்திற்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க இவருக்கு வாய்ப்பு வந்தது,அதனை பயன்படுத்தி விஜய் சேதுபதியின் கபெ ரணசிங்கம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார்.இப்படத்தினை தொடர்ந்து பாவ கதைகள் படத்திலும் நடித்துள்ளார்.

இவர் இசையமைப்பாளர் ஜீவியின் தங்கை என்பது இன்று வரை பலருக்கும் தெரியாது.

மேலும் அண்ணனின் இசையில் பல பாடல்களும் பாடியுள்ளார்.இப்படி சினிமாவை ஆல் ரவுண்டர் ஆக வலம் வருகிறார் பவானி ஸ்ரீ.

இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரிக்கு கதாநாயகியாக விடுதலை படத்தில் நடித்து பட்டையை கிளப்பி இருந்தார்.இவரின் நடிப்புக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே இப்படத்தில் உருவாகியுள்ளது என்று தான் கூறவேண்டும்.

Advertisement

அந்தளவிற்கு நடிப்பினால் கவர்ந்துள்ளார்.தற்போது இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் கிராமத்து கதாபாத்திரத்தில் நடித்த பொண்ணா இது மாடர்னில் கலக்குகிறது என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in