The Indian Times

வாரிசு படத்தினை வெளியிட தயாரிப்பாளர் கவுன்சில் மறுப்பு… கிளம்பிய புது பிரச்சனை

தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்றால் அது தளபதி விஜய் மட்டும் தான்.இவர் நடித்த அனைத்து படங்களும் கோடிகளில் வசூல் செய்து சாதனை படைத்தது வருகிறது.இவருக்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர் படம் வெளியாகும் நாள் தான் இவர்களுக்கு தீபாவளி பொங்கல் எல்லாம் என்று கூறினால் மிகையாகாது.அந்த அளவிற்கு தளபதி விஜய் ரசிகர்கள் அவரை நேசித்து வருகின்றனர்.பல போராட்டங்கள் விமர்சனங்களை சந்தித்து எதிலும் விட்டுக்கொடுக்காமல் பின்வாங்காமல் தொடர்ந்து போராடி இன்று இவ்வளவு பெரிய இடத்தினை அடைந்துள்ளார்.

Advertisement

அண்மையில் சன் பிக்சர் தயாரிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தளபதி நடிப்பில் உருவாகிய பீஸ்ட் படம் எதிர்பார்த்த வரவேற்பினை ரசிகர்களிடம் பெறவில்லை.இதனால் தனது அடுத்த படத்தில் உஷாராக நடித்து வருகிறார் விஜய்.இவரின் 66வது படத்தினை தோழா படத்தினை இயக்கிய வம்சி இயக்கி வருகிறார்.வாரிசு என இப்படத்திர்ற்கு படக்குழு பெயரிட்டுள்ளது.இப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிக்கா நடித்து வருகிறார்.மேலும் சரத்குமார் ,ஷியாம் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார்.அண்மையில் இப்படத்தின் பெயர் மற்றும் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

Advertisement

இதனை தொடர்ந்து இப்படத்தின் முதல் பாடல் ஆன ரஞ்சிதமே பாடல் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றது.இப்படம் தமிழ் மற்றும் தெழுங்கில் உருவாகி வருகிறது.தெலுங்கில் இப்படத்திற்கு வாரசுடு என பெயர் வைக்கப்பட்டுள்ளது.தெலுங்கில் இப்படத்தினை சங்கராந்தி அன்று வெளியிட அனுமதி கேட்ட நிலையில் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சில் மறுத்துள்ளது.பண்டிகை காலங்களில் நேரடி தெலுங்கு படங்களுக்கு மட்டுமே அனுமதி என்ற தீர்மானத்தின் அடிப்படையாக கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.இதனால் படக்குழு தற்போது என்ன செய்வது என யோசித்து வருகிறது.இதனால் பொங்கலுக்கும் படம் வெளியாகுமா என பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in