The Indian Times

ரஜினி பட சீனை திருடிட்டு.. சூப்பர்ஸ்டாருனு சொல்லுறீங்களே.. வாரிசை மீம்ஸ் போட்டு வச்சி செய்யும் நெட்டிசன்கள்

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே தமிழ் சினிமாவில் உள்ளது. தற்போது விஜய் படங்கள் என்றாலே அவை சரியாக ஓடாவிட்டாலும் பாக்ஸ் ஆபிசில் பல கோடிகளை வசூலித்து சாதனை படைத்தது வருகிறது. இதனால் இவர் படத்தினை தயாரிப்பதற்கு தயாரிப்பாளர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.அண்மையில் இவர் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார்.இப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகியது.இருப்பினும் மக்களிடம் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை,அதே சமயம் வசூலிலும் எந்த சரிவும் இல்லை.

Advertisement

தற்போது விஜய் தெலுங்கு பக்கம் இறங்கியுள்ளார்.தெலுங்கு சினிமா இயக்குனர் வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் தனது 66வது படமான வாரிசு படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் படத்தில் கதாநாயகியாக ராஷ்மிக்கா நடித்து வருகிறார்.மேலும் சரத்குமார் ,ஷியாம் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார்.பொங்கலுக்கு இப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் படத்தினை பெருமளவு கொண்டாடி வருகின்றனர்.இப்படம் அண்மையில் வெளியாகி உலகம் முழுவதும் 300 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது

Advertisement

இந்நிலையில் நேற்று வாரிசு படத்தின் நீக்கப்பட்ட காட்சிகளை படக்குழு வெளியிட்டிருந்தது.இந்த காட்சியில் விஜய் பிரகாஷ் ராஜ் அலுவலகத்திற்கே சென்று அவரையே அசிங்கப்படுத்தி கெத்தாக நடந்து வருவது போல் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.இதே காட்சி ரஜினியின் மிஸ்டர் பாரத் படத்திலும் இடம்பெற்றுள்ளது,இதனை கண்ட நெட்டிசன்கள் அதே காட்சியை அப்படியே எடுத்து வைத்துவிட்டு விஜயை சூப்பர் ஸ்டாருன்னு சொல்லுறீங்களே என பங்கமாக கலாய்த்து மீம்ஸ்களை பறக்க விட்டு வருகின்றனர்.

https://twitter.com/aravindarajm005/status/1631710977430528002?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1631710977430528002%7Ctwgr%5E0895c242ad605e0cc1f5136aa79bb3ab992e66f1%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fcineulagam.com%2Farticle%2Fvijay-copied-rajinikanth-in-varisu-1677898628

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in