The Indian Times

முதல்முறையாக அதர்வா மற்றும் சரத்குமார் இணைந்து நடிக்கும் நிறங்கள் மூன்று TRAILER இதோ…

முன்னணி நடிகர் முரளியின் மகன் அதர்வா.தந்தையை போல சாதிக்க வேண்டும் என சினிமாவுக்குள் நுழைந்தார்,காத்தாடி விடும் சிறுவனாய் பானா காத்தாடி படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகம் ஆகி முதல் படத்திலேயே பட்டையை கிளப்பினார் அதர்வா. இப்பட்ட்டத்தினை தொடர்ந்து பல நல்ல படங்களை ரசிகர்களுக்கு கொடுத்து தமிழ் சினிமாவில் நிரந்தர நடிகராக உருவெடுத்தார். ஈட்டி,சண்டிவீரன்,இமைக்கா நொடிகள் மற்றும் பரதேசி என பல வெற்றிப்படங்களை தமிழில் கொடுத்துள்ளவர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

இவருக்கு கடந்த சில மாதங்கள் முன்பு வெளியாகிய பட்டத்து அரசன் படம் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை அதன்படி அண்மையில் நடித்து வெளியாகிய சில படங்கள் இவருக்கு பெரும் தோல்வியை பெற்றுக்கொடுத்தது,இதனால் மீண்டும் நல்ல படங்களை கொடுக்க முயற்சி செய்து வருகிறார் அதர்வா.மேலும் கதைகளையும் நன்கு உன்னிப்பாக கவனித்து கேட்டு நடித்து வருகிறாராம்.தற்போது இவர் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடித்துள்ள நிறங்கள் மூன்று படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

Advertisement

சினிமாவில் இளம் இயக்குனராக கலக்கி வருபவர் கார்த்திக் நரேன்,இவர் இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்கு பின்பு இப்படம் உருவாகியுள்ளது.இப்படத்தில் அதர்வா உடன் சரத்குமார் மற்றும் ரஹ்மான் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.ஜேக்ஸ் பீஜாய் என்பவர் இசையமைத்துள்ளார்.இப்படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.படம் வெற்றிபெற தங்களது வாழ்த்துக்களை ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Embed video credits : AYNGARAN

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in