The Indian Times

என்னை நம்பி வந்தவங்களுக்காக என்ன வேணாலும் பண்ணுவேன்.. ஜெயம் ரவி தரலோக்கலாக மிரட்டும் அகிலன் ட்ரைலர்

ஜெயம் படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்து தமிழ் சினிமா தவிர்க்க முடியாத முன்னணி நடிகர் ஆக மாறியுள்ளார் ஜெயம் ரவி .முதல் படமே ஜெயம் என்பதால் ரவியுடன் ஜெயம் பெயரில் மட்டுமல்ல படத்திலும் இணைந்து விட்டது.இவர் அண்ணன் ஜெயம் ராஜாவை வைத்து சினிமாவிற்குள் நுழைந்து இருந்தாலும் தனது கடின உழைப்பு மற்றும் நடிப்பினால் மட்டுமே இந்த உயரத்தினை அடைந்துள்ளார்.வாய்ப்பு பலராலும் ஏற்படுத்தி தர முடியும் ஆனால் திறமை இருந்தால் மட்டுமே முன்னேற முடியும் என்பதற்கு இவர் ஒரு எடுத்துக்காட்டு.மிருதன்,டிக் டிக் டிக் போன்ற வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து தமிழ் சினிமாவில் நல்ல படங்களை கொடுத்து மக்களை வெகுவாக கவர்ந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இவர் நடிப்பில் வெளியாகிய தனி ஒருவன் படம் இவருக்கு பெரிய திருப்புமுனையாக சினிமாவில் அமைந்தது.ஆதி பகவன் படத்தில் இரட்டை வேடங்களில் நடித்து அசத்தியிருப்பார் ஜெயம் ரவி.அதிலும் குறிப்பாக பகவான் கதாபாத்திரத்தில் பிரித்து மேய்ந்திருப்பார்.ஹீரோ கதாபாத்திரம் மட்டுமில்லை வில்லன் கதாபாத்திரமும் கட்சிதமாக வரும் என பகவான் கதாபாத்திரத்தின் மூலம் தெரிவித்தார்.இவருக்கு அடுத்ததாக பூலோகம் எனும் படத்தினை இயக்கிய கல்யாண கிருஷ்ணன் என்பவர் இயக்கிய அகிலன் படம் வெளியாக உள்ளது.

Advertisement

இதில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.சாம் சி எஸ் இசையமைத்துள்ளார்.தூத்துக்குடி பகுதியை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது.ஸ்க்ரீன் சீன் நிறுவனம் இப்படத்தினை தயாரித்துள்ளது.இப்படம் மார்ச் மாதம் 10ஆம் தேதி வெளியாக உள்ளது.தற்போது இப்படத்தின் ட்ரைலரை வெளியிட்டுள்ளது படக்குழு.ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் படம் வெற்றிபெற ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Embed video credits : THINK MUSIC INDIA

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in