The Indian Times

என்னால எத்தனை பேரு செ த் தா ன்னு எனக்கே தெரியாது… சிம்பு அசுரத்தனமான வில்லனாக மிரட்டும் பத்துதல TEASER இதோ….

பிரபல இயக்குனர் டி ராஜேந்தர் மகன் சிலம்பரசன்.இவரை ரசிகர்கள் லிட்டில் சூப்பர் ஸ்டார் ,சிம்பு என செல்லமாகதான் அழைப்பார்கள்.அந்தளவிற்கு இவர் மீது பிரியம் வைத்துள்ளனர். மகனை நடிகனாக்க வேண்டும் என ராஜேந்தர் சிம்புவை குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் உறவை காத்த கிளி என்ற படத்தின் மூலம் அறிமுகம் செய்து வைத்தார்.பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக தொடர்ந்து நடித்து அசத்தியுள்ளார்.அப்பாவை போல இவரும் பல திறமைகளை கொண்டவர்.2002ஆம் ஆண்டு காதல் அழிவதில்லை என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு கதாநாயகனாக அறிமுகமாகி பட்டிதொட்டி எங்கும் பெரும் வரவேற்பினை பெற்றார்.நடை உடை பாவனை என அனைத்திலும் புதிய யுக்தியை கையாண்டு ரசிகர்களை தனது வசம் இழுத்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் இன்று பெரும் உச்ச நட்சத்திரமாக உள்ளார் சிலம்பரசன்.நடிகர் மட்டுமில்லாமல் இசையமைப்பாளர்,பாடகர்,பாடலாசிரியர் என பல திறமைகளை தன்னுள் கொண்டுள்ளவர்.அண்மையில் உடல் எடை அதிகம் இருந்த சிம்பு தற்போது ரசிகர்களுக்காக முற்றிலும் குறைத்து கேலி செய்தவர்கள் வாயை அடைத்து படங்களில் பழைய சிம்புவாக நடித்து அசத்தி வருகிறார்.இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்திருந்தார்.இப்படம் நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றது.

Advertisement

தற்போது இவர் இயக்குனர் ஒபிலி கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்க ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் இப்படத்தினை தயாரித்துள்ளது.இப்படத்தில் இவருடன் நடிகர் கவுதம் கார்த்திக்கும் இணைந்து நடித்துள்ளார்.அண்மையில் இப்படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது.இந்நிலையில் இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.டீசரில் சிலம்பரசன் மிரட்டியுள்ளதை தெளிவாக காண முடிவதால் நீண்ட நாட்களுக்கு பிறகு சிம்பு தனது ரசிகர்களுக்கு கொடுக்கும் சிறந்த விருந்தாக இப்படம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.இப்படம் வெற்றிபெற ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

Embed video credits : SONY MUSIC SOUTH

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in