கப்ஜா-திரை விமர்சனம்

கன்னட நடிகர் உபேந்திரா இயக்குனர் ஆர் சந்துரு இயக்கத்தில் நடித்துள்ள படம் தான் கப்ஜா.மேலும் இப்படத்தில் இவருடன் கிச்சா சுதீப்,சிவராஜ் குமார்,ஸ்ரேயா சரண் ஆகியோர் நடித்துள்ளனர்.பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள கேங்ஸ்டர் படம் இது.கேஜிஎப் படத்தினை முன்னோடியாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதை இப்படத்தின் ட்ரைலர் பார்க்கும் பொழுதே தெரிந்துவிடுகிறது.சரி படமும் கேஜிஎப் போல இருந்ததா என்பதை விமர்சனத்தில் காணலாம் வாருங்கள்

கப்ஜா-திரை விமர்சனம் 1

விளம்பரம்

படத்தின் கதை

சொல்லும் அளவிற்கு பெரிய கதை ஒன்றுமில்லை,வழக்கம் போல கேங்க்ஸ்டர் கதை தான்,இருந்தாலும் இரண்டு வரிகளில் சொல்கிறேன் கேளுங்கள்.அமராபுரம் என்ற ஊரை பிடிக்க இரண்டு பெரும் புள்ளிகள் போட்டி போட்டுகொண்டு வரும் நிலையில் இந்த பிரச்னையில் வந்து சிக்குகிறார் உபேந்திரா,பிரச்னையில் சிக்கியது அவர் மட்டும்மில்லை படம் பார்த்த நம்மளும் தான்.பின்னர் அமரபுரத்தினை தனது வசம் ஆக்குகிறார் கதாநாயகன் உபேந்திரா.உபேந்திராவை கொன்றுவிட்டு அவர் இடத்தை பிடிக்க பல டான்கள் வருகின்றனர்.அவர்களை எப்படி சமாளிக்கிறார் என்பதே படத்தின் கதை

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  என்னை Adjustment பண்ண சொன்னாங்க.. சக்திவேல் சீரியல் நடிகை ரேஷ்மா பிரசாத்

கப்ஜா-திரை விமர்சனம் 2

படத்தின் விமர்சனம்

விளம்பரம்

கேஜிஎப் படத்தை போல எடுக்க நினைத்து என்னமோ எடுத்து வைத்திருக்கிறார்கள்,எடுத்த உடனே எளிதாக உபேந்திரா டான் ஆகிவிடுவது நம்ப முடியாதபடி உள்ளது.உபேந்திராவை பெரிய டான் போல் காமிப்பது எல்லாம் ஓகே தான் ஆனால் வில்லன்களை அசால்ட்டாக வீட்டிற்கே சென்று கதையை முடிப்பது என்பது சற்று ஜீரணிக்க முடியாத விஷயமாக தான் உள்ளது.படம் தான் கேஜிஎப் போல வரவேண்டும் என்று எண்ணி எடுத்திருந்தால் கூட சரி பாடல்களும் அதே போலவா இருக்க வேண்டும் என எண்ணுவது,அப்படியும் பாடல்கள் சரியாக வரவில்லை.படத்தில் இருக்கும் ஒரு பாசிட்டிவ் என்னவென்றால் உபேந்திரா நடிப்பில் பல மெனக்கெடல்களை எடுத்துள்ளார்.ஷ்ரேயாவிற்கும் படத்தில் பெரிய கதைக்களம் இல்லை,பிற கதாபாத்திரங்களும் பலமாக இல்லை என்று தான் கூறவேண்டும்.

கட்டாயம் படிக்கவும்  விஷால் மிரட்டும் ரத்னம் பட TRAILER வெளியாகியது

கப்ஜா படத்திற்கு தி இந்தியன் டைம்ஸ் வழங்கும் ரேட்டிங் – 1.5/5

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment