The Indian Times

தீக்குள் இருந்து குதித்து வந்த STR..உயிரை பணயம் வைத்து நடிக்கிறாருப்பா மனுஷன்

பிரபல இயக்குனர் டி ராஜேந்தர் மகன் சிலம்பரசன்..தமிழ் சினிமாவில் உறவை காத்த கிளி என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அடியெடுத்து வைத்தார்.பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக அசத்தியுள்ளார்.அப்பாவை போல இவரும் பல திறமைகளை கொண்டவர்.2002ஆம் ஆண்டு காதல் அழிவதில்லை என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு கதாநாயகனாக அறிமுகமாகி பட்டிதொட்டி எங்கும் பெரும் வரவேற்பினை பெற்றார்.புது புது ஸ்டைலை சினிமாவில் அறிமுகப்படுத்தி இளைஞர்களையும் வெகுவாக கவர்ந்த சிலம்பரசன்.ஆண்கள் பெண்கள் என போட்டி போட்டு இவருக்கு ரசிகர்களாக மாறினர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் இன்று பெரும் உச்ச நட்சத்திரமாக உள்ளார் சிலம்பரசன்.நடிகர் மட்டுமில்லாமல் இசையமைப்பாளர்,பாடகர்,பாடலாசிரியர் என பல திறமைகளை தன்னுள் கொண்டுள்ளவர்.அண்மையில் உடல் எடை அதிகம் இருந்த சிம்பு தற்போது குறைத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.தற்போது இவர் கவுதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தினை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.படத்தில் கதாநாயகியாக சித்தி இத்தானி நடித்துள்ளார்.இப்படம் சில நாட்கள் முன்னர் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது

Advertisement

இப்படத்தின் மேக்கிங் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.வீடியோவில் சிம்பு தீக்குள் இருந்து குதித்து வருகிறார்.இந்த வீடியோ சிம்பு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.மேலும் சிம்பு நடிப்பிற்காக செய்யும் விஷயங்களை ரசிகர்கள் பெருமளவு பாராட்டி வருகின்றனர்.மேலும் வீடியோவை ஷேர் செய்து ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்

https://www.youtube.com/shorts/seDVIhTpdc0

Embed video credits : Behindwoods tv

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in