The Indian Times

மீண்டும் பிச்சைக்காரனாக மிரட்டும் விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2 TRAILER இதோ

இசையமைப்பாளராக சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்து பயணத்தினை தொடங்கியவர் விஜய் ஆண்டனி.இவர் 2005 ஆம் ஆண்டு சுக்ரன் என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தார்.இப்படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் பெருமளவு ஹிட் அடித்தது.இப்படத்தினை தொடர்ந்து ஹிட் ஆல்பங்களை இறக்கி தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக உருவெடுத்துள்ளார்.இவரது இசைக்கெனெ பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.ஆரம்ப கட்டத்தில் இசை கருவிகளை வாங்குவதற்கு காசில்லாததால் பல இசைகளை வாயிலேயே இசைத்து அந்த பாடலும் பெருமளவு ஹிட் அடித்துள்ளது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இசை ஒருபக்கம் இருக்க நடிப்பினை கையிலெடுத்தார் விஜய் ஆண்டனி.இவர் 2012 ஆம் ஆண்டு வெளியாகிய நான் படத்தின் மூலம் கதாநாயகனாக களம் இறங்கினார்.இப்படம் இவருக்கு சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.முதல் படத்திலேயே முன்னணி நடிகராக உருவெடுத்தார் விஜய் ஆண்டனி.பல நல்ல படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்து வருகிறார் விஜய் ஆண்டனி.தற்போது இவர் நடிப்பில் அக்னி சிறகுகள் ,கொலை என அடுத்தடுத்து படங்கள் வெளியாக இருக்கிறது.மேலும் இவர் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்தினை இயக்கி நடித்துள்ளார்

Advertisement

இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.இப்படத்தின் முதல் பாடல் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றிருந்தது.தற்போது இப்படம் வருகிற மே மாதம் 19 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.இப்படத்திற்கு ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கும் வேலையில் தற்போது இப்படத்தின் ட்ரைலரை வெளியிட்டுள்ளது படக்குழு.ட்ரைலரில் விஜய் ஆண்டனி நடிப்பில் மிரட்டியுள்ளதை காண முடிகிறது,ட்ரைலர் படத்தின் எதிர்பார்ப்பினை அதிகரித்துள்ளது.ரசிகர்கள் படம் வெற்றிபெற விஜய் ஆண்டனிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Embed video credits : SAREGAMA TAMIL

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in