The Indian Times

மீசை தாடியில் கெத்தாக வந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சீயான் விக்ரம்

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் விக்ரம்.நடிப்பிற்காக எந்த எல்லைக்கும் செல்ல கூடியவர் இவர்.இவருக்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.சாதரண நடிப்பு தானே அதற்கு இத்தனை மெனக்கெடல்கள் தேவையா என்று நினைக்காமல் அந்த கதாபாத்திரமாகவே வாழ்பவர்.1990 ஆம் ஆண்டு என் காதல் கண்மணி என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தவர் இவர்.தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தாலும் இவருக்கான வரவேற்பு எந்த சினிமாவிலும் கிடைக்கவில்லை தமிழ் படம் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் படங்களிலும் நடித்துள்ளார்.1999 ஆம் ஆண்டு இயக்குனர் பாலா இயக்கத்தில் சேது படத்தில் விக்ரம் நடித்தார்.இப்படத்தில் அவருடைய மொத்த உழைப்பையும் போட்டு தமிழ் சினிமாவையே அலற வைத்தார்.இப்படம் மாபெரும் வெற்றி கண்டது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இப்படத்தினை தொடர்ந்து இவர் ரசிகர்களால் சீயான் என செல்லமாக அழைக்கப்பட்டார்.தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் இவர்.பல நடிகர்களும் எப்படி நடிக்க வேண்டும் என்பதை விக்ரமை பார்த்து தான் கற்றுக்கொண்டதாக கூறும் அளவிற்கு நடிப்பிற்கு பெயர் போனவர்.தற்போது இவர் நடிப்பில் அடுத்ததாக கோப்ரா மற்றும் பொன்னியின் செல்வன் வெளியாக உள்ளது.இதனால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.இப்படங்களை தொடர்ந்து இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார்

Advertisement

தற்போது இதுவரை சமூக வலைத்தளங்களில் இல்லாத விக்ரம் முதல் முறையாக ட்வீட்டரில் கணக்கினை திறந்துள்ளார்.இதனை ரசிகர்களுக்காக வீடியோ பதிவிட்டு தெரிவித்துள்ளார்,இந்த வீடியோவில் அவர் கூறியதாவது,நிஜமாவே நான் தான் மாறுவேஷம் கிடையாது.ரஞ்சித் படத்திற்காக தாடி வைத்துள்ளேன்.ட்வீட்டருக்கு ரொம்ப காலதாமதமாக வந்துள்ளேன்.இந்த உலகத்தில் பல அன்புகள் உள்ளது எனக்கு அதை அனுபவிக்கலாம் என ட்வீட்டருக்கு வந்துள்ளேன் என கூறியுள்ளார்.இதனால் சீயான் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in