The Indian Times

விவேக் அவர்களுக்கு மிகவும் பிடித்த பாடலை பாடிய ஹரிஷ் கல்யாண்! Chinna Kalaivaanar Vivek Promo

தமிழ் சினிமாவிற்கு ஏற்பட்ட மிக பெரிய இழப்பு சின்ன கலைவாணர் விவேக் அவர்களின் மறைவு தான். ஏராளமான படங்களில் வயிறு குலுங்க சிரிக்க வைத்த மாபெரும் கலைஞன் , கடந்த அரபில் மாதம் உடல் நலக்குறைவால் காலமானார். வெள்ளி திரை பிரபலங்கள் முதல் சின்னத்திரை பிரபலங்கள் வரை அனைவரும் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

இவர் இறுதியாக ஹரிஷ் கல்யாண் நடித்த தாராள பிரபு திரைப்படத்தில் நடித்திருந்தார். இதை தொடர்ந்து அரண்மனை 3 , இந்தியன் 2 , யாதும் ஊரே யாவரும் கேளீர் ஆகிய படங்களிலும் நடித்திருந்தார் விவேக். ஆனால் இந்த படங்கள் வெளியாவதற்கு முன்பே அவர் இறந்துவிட்டார் என்பது தான் வருத்தம். மேலும் தற்போது அவர் பங்கேற்ற lol எங்க சிரி பாப்போம்

என்ற நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டார். தற்போது அந்த நிகழ்ச்சி ஓ.டி.டி யில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் தற்போது விஜய் டிவியில் சின்ன கலைவாணர் விவேக் என்ற நிகழ்ச்சின் மூலம் இந்த மாபெரும் கலைஞனுக்கு அனைவரும் அஞ்சலி செலுத்தியுள்ளனர். தற்போது அந்த ப்ரோமோ வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in