The Indian Times

பரம சுந்தரி பாடலுக்கு மணிமேகலையுடன் செம்ம டான்ஸ் போட்ட தீபா! Viral Dance Video

குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நபர்களும் ஒருவர் தீபா. இவர் இந்த நிகழ்ச்சிக்கு முன்பு சன் டிவி , விஜய் டிவியில் வரும் சீரியல்களில் நடித்திருக்கிறார். அது மட்டுமல்லாது சில படங்களில் துணை நடிகையாகவும் நடித்துள்ளார் தீபா. ஆனால் அவருக்கு பெரும் புகழும் வாங்கி தந்த நிகழ்ச்சி விஜய் டிவியின் குக்கு வித் கோமாளி தான். அதே போல் இந்த குக்கு வித் கோமாளி நிகழிச்சியில் கோமாளிகளுள் ஒருவரானவர் தான் மணிமேகலை.

Advertisement

இவரை செட்டில் அனைவரும் சூனிய பொம்மை என்று செல்லமாக கிண்டல் செய்வர். இவர் ஒருவர் மட்டும் தான் நடுவர்களையும் எளிதாக கலாய்த்து ரசிக்கும் படியான குறும்புகளை செய்து வருபவர். இவர் 2017ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி ஹுசைன் என்னும் நடன கலைஞரை பதிவு திருமணம் செய்தார். இதன் பின்பு நகைச்சுவை நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் பங்கேற்ற இவர் பின்பு குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

இதில் தன்னோடு சேர்ந்து சமைக்கும் குக்குகளை இவர் வச்சி செய்வதில் இவர் புகழ்பெற்றவர். இந்நிலையில் இவர் தன் கணவருடன் சேர்ந்து யூட்யூப் சேனல் ஒன்றை துவங்கினார். மேலும் தற்போது விஜய் டிவியில் பல நிகழகிகளில் தொகுப்பாளினியாக இருக்கிறார் மணிமேகலை. தற்போது இவர்கள் இருவரும் பிரபலமான பாடலான பரம சுந்தரி பாடலுக்கு நடனமாடிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

https://www.youtube.com/watch?v=0qXKcDf9kAM

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in