The Indian Times

OO ANTAVA மாமா பாடலை மேடையில் பாடி அசத்திய பாடகி இந்த்ராவதி …என்ன VOICE-ப்பா இவங்களுக்கு செம்ம

நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் 5 மொழிகளில் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்த திரைப்படம் புஷ்பா.இப்படத்தினை இயக்குனர் சுகுமார் இயக்கி இருந்தார்.இப்படத்தில் கதாநாயகியாக நடிகை ராஷ்மிக்கா மந்தனா நடித்து அசத்தி இருப்பார்.இப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியே வந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்தது என்று தான் சொல்ல வேண்டும்.இப்படம் உருவாகும் பொழுதே இரண்டு பாகங்களாக உருவாகி உள்ளது.முதல் பாகத்தின் இறுதியில் நடிகர் பகத் பாசில் வந்து அனைவரையும் மிரள செய்தார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

Advertisement

இரண்டாம் பாகத்தில் முழுக்க முழுக்க அல்லு அர்ஜூனுக்கும் பகத் பாசிலுக்கும் தான் காட்சிகள் இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் இரண்டாம் பாகத்தில் நடிகர் விஜய் சேதுபதியையும் நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.சும்மாவே வில்லனாகவும் கதாநாயகனாகவும் தமிழ் சினிமாவை கலக்கி வருகிறார் ,இந்த வாய்ப்பு கிடைத்தால் கேட்கவா வேண்டும்.இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.இப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் மாபெரும் ஹிட் அடித்தது.

Advertisement

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகிய ஊ சொல்றியா மாமா பாடல் பெரும் வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றது.இதற்கு தேவி ஸ்ரீ பிரசாத் ஒரு காரணம் என்றால் சமந்தாவும் ஒரு காரணம்.வெறித்தனமாக நடனமாடி அனைவரையும் அசர செய்திருப்பார்.இப்பாடலை தெலுங்கில் பாடகி இந்திராவதி பாடியிருந்தார்.அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவரிடம் ஊ சொல்றியா மாமா பாடலை பாட சொல்லி அவர் தெலுங்கில் அந்த பாடலை பாடி அனைவரையும் அசத்தியுள்ளார்.தமிழில் ஆண்ட்ரியா பாடிய பாடலை விட இப்பாடல் அற்புதமாக அமைந்துள்ளது,இதற்கு முழுக்க காரணம் இவரின் குரல் என்று தான் கூற வேண்டும்,தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது

Embed video credits : BEHINDWOODS TV

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in