The Indian Times

அக்கா,அண்ணன் வா சேர்ந்து போட்டா எடுக்கலாம்… குடும்பத்துடன் செல்வராகவன் பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் தனுஷ்

துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆகி இன்று ஹாலிவுட் வரை உயர்ந்திருக்கிறார் தனுஷ்.இதற்கு இவரது விடா முயற்சியும் கடின உழைப்பே காரணம்.ஆரம்பத்தில் பல எதிர்மறை விமர்சனங்கள் கேலிகள் அனைத்தையும் பெற்று தன்னை தானே செதுக்கி இன்று இந்த அளவிற்கு உயர்ந்துள்ளார்.பல வெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார் தனுஷ்.இவர் முன்னாள் மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் நடித்த 3 படம் இவருக்கு சினிமாவில் பெரும் திருப்பு முனையாக அமைந்தது.இப்படத்தில் இவர் பாடிய ஒய் திஸ் கொலைவெறிடி என்ற பாடல் மிக பெரிய அளவு பட்டிதொட்டி எங்கும் ஹிட் அடித்தது.இதனை தொடர்ந்து இவர் உலகம் முழுவதும் மிக பிரபலமாகினார்.

Advertisement

அண்மையில் இவர் இயக்குனர் ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் படத்தில்நடித்திருந்தார்.இப்படம் உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது.இப்படத்தினை தொடர்ந்து தனுஷ் தெலுங்கில் சார் படத்திலும் நடித்து வருகிறார்.அண்மையில் தனுஷ் நடிப்பில் உருவாகிய நானே வருவேன் படம் நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றிருந்ததுதற்போது இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் வாத்தி படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் இவருக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார்.சமுத்திரக்கனி இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.இப்படத்திற்க்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் அண்மையில் உலகம் முழுவதும் வெளியாகி இவரது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Advertisement

இன்று ஞாயிற்றுக்கிழமை மற்றும் அண்ணன் செல்வா ராகவன் பிறந்தநாள் என்பதால் தான் கட்டிய புது வீட்டில் அண்ணன் தங்கைகளை அழைத்து விடுமுறையை கொண்டாடியுள்ளார்.இந்த புகைப்படங்களை இயக்குனர் செல்வராகவன் மனைவி கீதாஞ்சலி செல்வராகவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.தனுஷ் ரசிகர்கள் புகைப்படத்தினை இன்ஸ்டாகிராமில் லைக்குகளை செய்து வைரலாக்கி வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in