தில்லானா தில்லானா இவ தித்திக்கின்ற தேனா? அடடே இன்னும் முத்து படத்துல பார்த்த மாதிரியே இருக்கீங்களே மீனா

தமிழ் சினிமாவில் 90 களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா.தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அசத்தி வந்தவர் இவர்.இவர் நவயுகம் என்ற படத்தில் கதாநாயகியாக தெலுங்கு சினிமாவில் அறிமுகம் ஆகினார்.பின்னர் தமிழில் இவர் கதாநாயகியாக நடித்த என் ராசாவின் மனசிலே பெரும் வரவேற்பினை தமிழ் சினிமாவில் பெற்றது.இந்த படத்தில் இவருக்கு கிடைத்த நல்ல வரவேற்பினை தொடர்ந்து தமிழ் தெலுங்கு என பல மொழிகளிலும் கதாநாயகியாக நடித்து அசத்தினார்.தமிழ் பல முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்துவிட்டார் மீனா.தமிழ் சினிமாவில் இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டத்தினை சேர்த்துக்கொண்டு பல வெற்றிப்படங்களை தமிழில் அளித்தவர்.ரஜினி,கமல்,அஜித் என பல முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்து விட்டார் மீனா. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  சின்னத்திரை நடிகர்கள் தமிழ் புத்தாண்டு கொண்டாட்ட புகைப்படங்கள்

தில்லானா தில்லானா இவ தித்திக்கின்ற தேனா? அடடே இன்னும் முத்து படத்துல பார்த்த மாதிரியே இருக்கீங்களே மீனா 1

விளம்பரம்

மீனாவின் கணவர் வித்யாசாகருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படவே அவருக்கு சென்னை ஆழ்வார்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர்.மேலும் அவருக்கு நுரையீரல் பாதிப்பும் இருந்துள்ளதால் சிகிச்சை பலனளிக்காமல் கடந்த ஜூன் 28 ஆம் தேதி இரவு இயற்கை எய்தினார்.இது சினிமா உலகில் பெரும் அதிர்ச்சியை அளித்தது.பெண் குழந்தையுடன் மீனா செய்வதறியாது கணவர் இறுதி சடங்கில் நிற்கும் புகைப்படங்கள் வீடியோக்கள் வைரலாகியது.மீனாவின் முகத்தில் அந்த பழைய சிரிப்பை எப்பொழுது பார்க்கப்போகிறோம் என ரசிகர்கள் ஏங்கி வந்தனர்.தற்போது கணவர் இறப்பில் இருந்து மீண்டு வரும் மீனா,தனது நண்பர்களுடன் சேர்ந்து அடிக்கடி வெளியே சென்று இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  மாமா உடன் சிங்கப்பூர் Honeymoon சென்ற ரோபோ சங்கர் மகள் இந்திரஜா

தில்லானா தில்லானா இவ தித்திக்கின்ற தேனா? அடடே இன்னும் முத்து படத்துல பார்த்த மாதிரியே இருக்கீங்களே மீனா 2

விளம்பரம்

மீனா திரை உலகிற்கு வந்து 40வருடங்கள் ஆகியுள்ள நிலையில் இவருக்கு சில தினங்களுக்கு முன்னர் மீனா 40 என்ற விழாவை தனியார் யூடியூப் நிறுவனம் ஒன்று நடத்தியது.இந்த நிகழ்ச்சிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் பல 90 நடிகைகள் வருகை தந்து மீனாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.இந்த நிகழ்ச்சிக்காக நடிகை மீனா செம்ம மாடர்ன் ஆக மாறி அசத்தியுள்ளார்.அப்பொழுது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  இதுவரை பார்த்திராத சிறகடிக்க ஆசை சீரியல் மீனா மாடர்ன் உடை புகைப்படங்கள்

விளம்பரம்

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment