The Indian Times

மகன்களுடன் SELFI எடுத்து விளையாடிய கேப்டன் மில்லர்

நடிகர் தனுஷ் தமிழ் சினிமா கொண்டாடும் முன்னணி நடிகர்களில் ஒருவர்.இவர் இயக்குனர் கஸ்தூரி ராஜாஅவர்களின் இரண்டாவது மகன் ஆவார். இவர்கள் குடும்பமே சினிமாவில் கொடிகட்டி பறக்கும் குடும்பம் காரணம் அப்பாவும் இயக்குனர்,அண்ணனும் இயக்குனர் என்பதாலே.அப்பா அண்ணன் மூலம் சினிமாவுக்குள் நுழைந்தாலும் தனது கடின உழைப்பினால் மட்டுமே இன்று இந்த இடத்தினை அடைந்துள்ளார்.துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆகி இன்று ஹாலிவுட் வரை உயர்ந்திருக்கிறார் தனுஷ்.

Advertisement

அண்மையில் இவர் இயக்குனர் ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் படத்தில்நடித்திருந்தார்.இப்படம் உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது.இப்படத்தினை தொடர்ந்து தனுஷ் தெலுங்கில் சார் படத்திலும் நடித்து வருகிறார்.அண்மையில் தனுஷ் நடிப்பில் உருவாகிய நானே வருவேன் படம் நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றிருந்ததுதற்போது இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் வாத்தி படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் இவருக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார்.சமுத்திரக்கனி இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.இப்படத்திற்க்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் அண்மையில் உலகம் முழுவதும் வெளியாகி இவரது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Advertisement

அடுத்ததாக தனுஷ் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில் படப்பிடிப்பு ஒரு பக்கம் சென்றாலும் நடிகர் தனுஷ் தனது மகன்களுடன் ஒருபக்கம் நேரத்தினை செலவிட்டு தான் வருகிறார். தனது மகன்களுடன் விளையாட்டாக இவர் எடுத்த செல்பி புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அடடே மகன் மேல எவ்வளவு பாசம் கேப்டன் மில்லருக்கு என கூறி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in