The Indian Times

பிரம்மாண்டமாக நடைபெற்ற கிரேஸ் கருணாஸ் மகள் திருமணம்…

நடிகர் கருணாஸ் சினிமாவில் மட்டும் இல்லாமல் அரசியலிலும் கலக்கி வருபவர்.சிறந்த நகைச்சுவை நடிகராக அனைவரது மனதிலும் நீங்காத இடத்தை பிடித்தவர்.இவர் மனைவி கிரேஸ்.இவர் ஒரு சிறந்த பாடகி ஆவார்.சீனா தானா,திண்டுக்கல்லு திண்டுக்கல்லு என குத்து பாடல்களை பாடியுள்ளார்.இவர் சினிமாவில் குறைந்த அளவே பாடல்கள் பாடி இருந்தாலும் இவர் பாடிய பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகும்.இவர் கருணாஸை காதலித்து திருமணம் செய்துகொண்டார்,இவர்க்கு கென் என்ற பையன் மற்றும் மகள் உள்ளார்.கென் சினிமாவில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement

கிரேஸ் முதன் முதலில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய கலக்க போவது யாரு சாம்பியன்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார்.இந்த நிகழ்ச்சியில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.பலர் இவரை கலாய்த்தாலும் எதையும் இவர் சீரியசாக எடுத்துக்கொள்ளாததே இவரை மக்களுக்கு அதிகம் பிடிக்க காரணம் ஆகும்.பின்னர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இறுதிப்போட்டி வரை வந்து அசதியெடுத்தார்.இந்த நிகழ்ச்சியில் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகரித்தது.தற்போது இவர் மகளுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.

Advertisement

இந்த திருமண புகைப்படத்தினை கருணாஸ் மகன் கென் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு அக்காவுக்கும் மாமாவுக்கும் வாழ்த்துக்கள் என கூறியுள்ளார். இந்த புகைப்படத்தில் ரசிகர்கள் மணமக்களுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.மேலும் இருவரின் ஜோடி பொருத்தமும் சூப்பர் என கூறி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in