தளபதி விஜய் தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர்களில் ஒருவர்.இவர் நடித்த அனைத்து படங்களும் கோடிகளில் வசூல் செய்து சாதனை படைத்தது வருகிறது.இவருக்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.தமிழில் மட்டும் இல்லாமல் கேரளா தெலுங்கு போன்ற சினிமாக்களிலும் இவருக்கு பெரும் வரவேற்பும் ரசிகர்கள் கூட்டமும் உள்ளது.இதுவே தளபதி விஜயின் பலம்.இவர் நடிக்கும் படங்கள் தற்போது நூறு கோடிகளுக்கு மேல் தான் வசூல்களை செய்து வருகிறது.
இதனாலேயே தயாரிப்பாளர்கள் தளபதி விஜயை வைத்து படம் எடுக்க வரிசையில் காத்துக்கொண்டிருக்கின்றனர்.இந்நிலையில் அண்மையில் தளபதி விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் வாரிசு படம் வெளியாகி உள்ளது.இப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிக்கா மந்தனா நடித்துள்ளார்.தமன் இசையமைத்துள்ளார்.இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று திரையரங்குகள் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.இதுவரை உலகம் முழுவதும் இப்படம் 250 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது
மேலும் படக்குழு அண்மையில் விமர்சையாக வெற்றியை கொண்டாடியது.தற்போது தளபதி தனது அடுத்தப்படமான லியோ படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார்.இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் ரசிகர்களுக்கு பெரும் இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது,அதன்படி உலகம் முழுவதும் வாரிசு திரைப்படம் 27 நாட்களில் 300 கோடியை வசூலித்துள்ளது.இந்த செய்தியை இணையத்தில் தளபதி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.மேலும் விஜய் ரசிகர்கள் அஜித் பட வசூல் எங்கே என கூறி பயங்கரமாக கலாய்த்து வருகின்றனர்.
Aatanayagan ON DUTY 🔥#MegaBlockbusterVarisu officially enters the 300Crs worldwide gross collection club now 🤩#Thalapathy @actorvijay sir @SVC_official @directorvamshi @iamRashmika @MusicThaman @7screenstudio @TSeries #Varisu#VarisuCrosses300CrsWWGross pic.twitter.com/A4K1yLeD4E
— Sri Venkateswara Creations (@SVC_official) February 6, 2023
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in