The Indian Times

BIGGBOSS சாக்ஷிக்கு திடீரென முத்தம் கொடுத்த COOL SURESH… கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள்

கூல் சுரேஷ் என்று கூறினாலே முதலில் நினைவுக்கு வருவது வெந்து தணிந்தது காடு படம் தான்.இவர் தான் இப்படத்திற்கு முதலில் ப்ரோமோஷன் செய்ய தொடங்கினார்.பல மாதங்களாக இப்படத்திற்கு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் சிம்புக்காக மட்டும் இதனை செய்து வந்தார்,இவர் 2001 ஆம் ஆண்டு சாக்லேட் என்ற படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகம் ஆகினார்.இப்படத்தினை தொடர்ந்து பல தமிழ் படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.பல முன்னணி நடிகர்கள் படத்திலும் இவர் நடித்து விட்டார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

தமிழ் சினிமாவில்,ரவுடி,அடியாள் ,நண்பர் என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதற்கு தகுந்தது போல் நடித்து பட்டையை கிளப்பும் திறமை கொண்டவர் கூல் சுரேஷ். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.வாரம் தோறும் வெள்ளிக்கிழமை படம் வெளியாகும் நாளன்று படக்குழு திரையரங்கு வருவார்களா என்பது தெரியாது ஆனால் கூல் சுரேஷ் வந்துவிடுவார்.

Advertisement

தற்போது நான் கடவுள் இல்லை என்ற படத்தினை பார்க்க வந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.இந்த படத்தில் பிக் பாஸ் சாக்ஷி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்,படம் குறித்து கூல் சுரேஷ் கருத்து சொல்லும் பொழுது சட்டென சாக்ஷிக்கு முத்தம் கொடுத்துள்ளார் ,இதனால் சாக்ஷி செய்வதறியாது திகைத்துள்ளார்.இதனை பார்த்த நெட்டிசன்கள் கடும் அதிர்ச்சியடைந்து கூல் சுரேஷை கிழித்து தொங்கவிட்டு வருகின்றனர்.எப்படி இவ்வாறு நீங்கள் செய்யலாம்,ஒருபெண்ணின் அனுமதி இல்லாமல் அவரை தொடுவது தவறு என கூறி கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Embed video credits : BEHINDWOODS AIR

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in