The Indian Times

நடிகர் ரகுவரனின் குடும்ப புகைப்படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களால் என்று மறக்க முடியாத கேரக்டர் என்றால் அது ஆண்டனி கேரக்டர் தான்.அந்தளவுக்கு ரசிகர்களை தனது கதாபாத்திரத்தினால் கட்டி போட்டுள்ளார் ரகுவரன் என்று தான் கூற வேண்டும்.இவருக்கு இன்றுவரை பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

சினிமாவில் இவரது திரைப்பயணத்தை 1982 ஆம் ஆண்டு காகா என்ற மலையாள படத்தின் மூலம் தொடங்கினர்.இப்படத்திற்கு பிறகு தமிழில் வெளியாகிய ஏழாவது மனிதர் என்ற படத்தின் மூலம் கோலிவுட்டில் கால் தடம் பதித்தார் ரகுவரன்.

Advertisement

இவர் 1982 முதல் 85 வரை பல படங்கள் நடித்தும் இவருக்கு வெற்றியை கொடுத்த படம் என்றால் அது 1986ஆம் ஆண்டு வெளியாகிய சம்சாரம் அது மின்சாரம் என்ற படம் தான்.இப்படத்தில் இவர் நடித்த சிதம்பரம் கதாபாத்திரம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.

இப்படத்திற்கு பிறகு ரசிகர்களால் அடையாளம் காணப்பட்ட இவர் மெல்ல மெல்ல வில்லன் நடிகராக தமிழ் சினிமாவில் ஜொலிக்க தொடங்கிவிட்டார்.

அப்படி இவரின் வில்லத்தனத்திற்கு கிடைத்த தீனி தான் பாட்ஷா படத்தில் வில்லனாக நடித்தது.இப்படத்தில் வில்லனாக நடிக்கவில்லை வாழ்ந்தார் என்று தான் கூற வேண்டும்.

இப்படம் இவருக்கு கோலிவுட்டின் உயரத்தில் தூக்கி கொண்டு வைத்தது.மிகப்பெரிய வில்லன் நடிகராக உருவெடுத்தார்.

இவர் நடிகை ரோகிணியை திருமணம் செய்துகொண்டார்,இவர்களுக்கு ரிஷி வரன் என மகன் உள்ளார்.நடிகர் ரகுவரன் 2008 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இயற்கை எய்தினார்.இது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது என்று தான் சொல்லவேண்டும்.

Advertisement

மீண்டும் இவரை போல நடிகர்கள் வருவார்களா என்பது இன்றுவரை கேள்விக்குறிதான்.அப்படி ரகுவரன் தனது மகன் மற்றும் மனைவியுடன் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in