The Indian Times

BOUNCER செய்த செயலால் கடுப்பாகி திட்டிய விக்ரம் பிரபு

பழம்பெரும் நடிகர் சிவாஜிகணேசன்,அவரது மகன் பிரபு,பிரபுவின் மகன் விக்ரம் பிரபு என மிகப்பெரிய சினிமா குடும்பத்தில் இருந்து மூன்றாவது தலைமுறையாக சினிமாவிற்கு வந்தவர் விக்ரம் பிரபு.இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியாகிய கும்கி படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியவர் விக்ரம் பிரபு.

முதல் படமே மாபெரும் வெற்றியை இவருக்கு பெற்றுத்தந்தது.இப்படத்தினை தொடர்ந்து பிரபலமாகிய இவருக்கு தொடர்ந்து படவாய்ப்புகள் வர தொடங்கியது.அடுத்தடுத்து நல்ல படங்களை மக்களுக்கு கொடுக்க தொடங்கினார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

Embed video credits : CINEULAGAM

இடையில் சில படங்கள் இவருக்கு தோல்வியை கொடுத்தாலும்,அதை பற்றி கவலையில்லாமல் மீண்டும் வெற்றிகாக போராடி வருகிறார்.அண்மையில் அறிமுக இயக்குனர் தமிழ் இயக்கத்தில் இவர் நடித்த டாணாக்காரன் படம் ஹாட் ஸ்டார் ஓடிடியில் வெளியாகி மாபெரும் வரவேற்பினை பெற்றது.

இப்படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராக வந்துள்ளார்.இப்படம் இவரது சினிமா வாழ்க்கையில் கும்கி படத்திற்கு பிறகு நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றுள்ளது என்று கூறினால் மிகையாகாது.

விக்ரம் பிரபுவுக்கு அடுத்ததாக ரெய்டு , பாயும் ஒலி நீ எனக்கு ஆகிய படங்கள் வெளியாக உள்ளது.இன்று இவர் நடிப்பில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படம் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் விக்ரம் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.முதல் பாகத்தை விட இரண்டாவது பாகத்தில் இவருக்கு அதிக ஸ்கொப் கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

இப்படத்தினை காண விக்ரம் பிரபு இன்று திரையரங்கிற்கு வருகை தந்துள்ளார்.அப்பொழுது அவர் வரும் வழியில் நின்றுகொண்டிருந்த சிறுவனை பவுன்சர் ஒருவர் நகற்றி விட்டதால் கடுப்பாகிய விக்ரம் பிரபு அவரை திட்டியுள்ளார்.இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in