The Indian Times

ஐ… பாட்டி வந்துட்டாங்க… நடிகை ராதிகாவை பார்த்த உடன் உற்சாகத்தில் அவரை கட்டியணைத்து பேரன் பேத்திகள்

தமிழ் சினிமாவின் பிரபல நடிகை ராதிகா.1978 ஆம் ஆண்டு கிழக்கே போகும் ரயில் என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆகியவர் நடிகை ராதிகா.இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பினை பெற்று கொடுத்தது.இப்படத்தினை தொடர்ந்து பல தமிழ் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உருவெடுத்தார்.ரஜினி,கமல் விஜயகாந்த் என பல முன்னணி நடிகர்களுக்கும் கதாநாயகியாக நடித்து அசத்தியுள்ளார் இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே 1980 மற்றும் 90களில் உள்ளது.இவர் பிரபல நடிகர் எம் ஆர் ராதாவின் மகள் ஆவார்.சினிமாவில் எளிதாக அறிமுகம் ஆகினாலும் அவரது கடின உழைப்பினால் மட்டுமே இன்று இந்த இடத்தில உள்ளார் ராதிகா. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இவர் நடிகர் சரத்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் மகள் ஒருவர் உள்ளார்.தற்போது ராதிகா திரைப்படங்களில் குணச்சித்திர கதைகளில் நடித்து அசத்தி வருகிறார்.தற்போது சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ராதிகா.இவ்வாறு சினிமா மற்றும் குடும்பம் என இரண்டையும் ஒரே நேர்கோட்டில் வைத்து சமமாக கவனித்து வருகிறார்.இவர் தற்போது தனது மகள் வீட்டிற்கு வருகை தந்துள்ளார்.

Advertisement

இவர் மகளின் பிள்ளைகள் .பாட்டி ராதிகா வருகையை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.இந்நிலையில் ராதிகா வீட்டிற்குள் நுழையவும் பாட்டியை பார்த்த சந்தோஷத்தில் துள்ளிக்குதித்து அவரை கட்டியணைத்து வரவேற்றுள்ளனர்,மேலும் ராதிகா பேரன் பேத்திகளுக்கு பொம்மைகளையும் வாங்கி கொடுத்து அவர்களுடன் விளையாடியுள்ளார்.இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வாழ்க்கை மிக அழகானது என நெகிழ்ந்து கூறியுள்ளார்.இந்த வீடியோ இவரது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.நீங்கள் ஒரு சிறந்த நடிகை மட்டும் இல்லை சிறந்த பாட்டியும் கூட என கூறி கமெண்ட் செய்து வருகின்றனர் ரசிகர்கள்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in