பேபி..இது உனக்கு முதல் பிறந்தநாள்… மனைவி நிக்கியின் பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் ஆதி

மிருகம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகியவர் ஆதி.இப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.இதனை தொடர்ந்து வரிசையாக பல தமிழ் படங்களில் நடிக்க தொடங்கினர்.இவர் நடித்த படங்கள் அனைத்தும் இவருக்கு மக்களிடம் நல்ல வரவேற்பினை அளித்தது. தமிழில் இவருக்கு கிடைத்த வரவேற்பால் தெலுங்கு சினிமாவிலும் இவருக்கு வாய்ப்பு கிடைக்க ஆரம்பித்தது.அதனை தொடர்ந்து தெலுங்கிலும் படம் நடித்து வருகிறார் ஆதி. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

பேபி..இது உனக்கு முதல் பிறந்தநாள்... மனைவி நிக்கியின் பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் ஆதி 1

விளம்பரம்

1983 என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமாகியவர் நிக்கி கல்ராணி.அதனை தொடர்ந்து மலையாளம் மற்றும் கன்னட படங்களிலும் நடிக்க தொடங்கினார்.தமிழில் இவர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியாகிய டார்லிங் படத்தின் மூலம் தான் முதல்முறையாக அறிமுகம் ஆகினார்.இப்படத்தின் வெற்றிக்கு பிறகு தொடர்ந்து தமிழ் படங்களிலும் கதாநாயகியாக நடிக்க தொடங்கினார்.ஆதியும் நடிகை நிக்கி கல்ராணியும் முதல் முதலாக யாகாவா ராயினும் நா காக்க ஏன்ற படத்தில் தான் இணைந்து நடித்தனர்.இப்படத்தினை தொடர்ந்து மரகதநாணயம் படத்தில் இருவரும் இணைந்து நடித்து அசத்தினார்கள்.

பேபி..இது உனக்கு முதல் பிறந்தநாள்... மனைவி நிக்கியின் பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் ஆதி 2

விளம்பரம்

இவர்களுக்குள் இருந்த நட்பு காதலாக மாறியது.இதனை அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.அண்மையில் இருவரும் திருமணமும் செய்து கொண்டனர்.தற்போது நிக்கி கல்ராணியின் பிறந்தநாளை ஆதி கோலாகலமாக கொண்டாடியுள்ளார்.கேக் வெட்டி அதனை மனைவி நிக்கி முகத்திலும் பூசியுள்ளார்.இந்த புகைப்படங்களை நிக்கி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களும் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்களும் தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை நிக்கிக்கு தெரிவித்து வருகின்றனர்.

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment