The Indian Times

வேகமா வா விக்கி…தானே தெருவில் இறங்கி சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு உடை வழங்கிய நடிகை நயன்தாரா…

லேடி சூப்பர் ஸ்டார் என சினிமா ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் நயன்தாரா.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது.தனது நடிப்பினால் பல ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர் இவர்.தமிழில் சரத்குமாருக்கு ஜோடியாக ஐயா படத்தின் மூலம் அறிமுகம் ஆகினார்.இப்படத்தினை தொடர்ந்து சூப்பர் ஸ்டாருக்கே ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்து பெரும் வரவேற்பினை பெற்றார் நயன்தாரா.ஆரம்பத்திலேயே சூப்பர் ஸ்டார் உடன் நடித்ததால் தமிழ் சினிமாவில் நயனுக்கு தனி இடம் உருவாகியது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

Advertisement

தற்போது நடிகை நயன்தாரா இயக்குனர் அஸ்வின் இயக்கத்தில் நடித்துள்ள படம் கனெக்ட்.இப்படத்தில் இவருடன் அனுபம் கேர்,சத்யராஜ் மற்றும் வினய் ஆகியோர் நடித்துள்ளனர்.நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தயாரிப்பு நிறுவனமான ரவுடி பிக்சர் நிறுவனம் இப்படத்தினை தயாரித்துள்ளது. அண்மையில் இப்படம் திரையரங்குகளில் வெளியாகியது. 90 நிமிடங்கள் மட்டுமே இப்படம் ஓடும் என்பதால் பல திரையரங்குகள் இடைவேளை இல்லாமல் படத்தினை ஓட்டினர்.இப்படம் நயன்தாரா ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

தற்போது நடிகை நயன்தாரா தனது கணவருடன் சேர்ந்து சாலையில் நேரிடையாக இறங்கி சாலையோரம் வசிக்கும் மக்கள் மற்றும் குழந்தைகளுக்கு புதிய ஆடையை வழங்கியுள்ளார்.இந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.ரசிகர்கள் நடிகை நயன்தாராவின் இந்த செயலை பெருமளவு பாராட்டி வருகின்றனர்.மேலும் வீடியோ ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு சமூகவலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆக்கப்பட்டு வருகிறது.

https://youtu.be/ePudmAKd7jA?t=12

Embed video credits : BEHINDWOODS MAX

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in