The Indian Times

துணிவு ட்ரைலரிடம் தோற்றுப்போன வாரிசு ட்ரைலர்…ஆரம்பமே இப்படியா? ரசிகர்கள் சோகம்

தமிழ் சினிமாவின் இரண்டுபெரும் தூண்கள் என்று சொன்னால் அது விஜய் மற்றும் அஜித் மட்டுமே.சூப்பர் ஸ்டார் உலகநாயகனுக்கு பிறகு இவர்கள் தான் ஆரோக்கியமான போட்டியாளர்களாக சினிமாவில் வலம் வருகின்றனர்.இவர்களுக்கு இடையே எந்த போட்டியோ பொறாமையோ இல்லை,ஆனால் இவர்களில் யார் பெரியவர் என்ற போட்டி இருவரது ரசிகர்களிடமும் உள்ளது.இவர்களின் படம் தனி தனியாக வெளியாகும் பொழுதே இப்படி என்றால் ஒரே நாளில் வெளியானால் என்னவாகும் என்பதை போல தற்போது பல ஆண்டுகள் கழித்து இருவரது படங்களும் மோத உள்ளது.

Advertisement

இதுவரை அஜித் விஜய் படங்கள் மோதியதில் அதிகம் விஜய் படம் தான் வெற்றிபெற்றுள்ளது.ஆனால் இந்த முறை இருவருமே தங்களது படத்தில் மிரட்டியுள்ளனர்.இதனால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.அதன்படி அஜித்தின் துணிவு மற்றும் விஜயின் வாரிசு படங்கள் வருகிற 11 ஆம் தேதி பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளது.இந்நிலையில் இரண்டு படத்தின் ட்ரைலரும் அண்மையில் வெளியாகி ரசிகர்களால் பெரும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.ரசிகர்களிடம் இரண்டு ட்ரைலரும் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Advertisement

தற்போது போட்டி இந்த ட்ரைலரிலேயே ஆரம்பமாகிவிட்டது என்று தான் கூற வேண்டும்,யாருடைய ட்ரைலர் அதிக பார்வையாளர்களை பெற்றுள்ளது அவரே வெற்றிபெற்றவர் என ரசிகர்கள் போட்டியை தொடங்கிவிட்டனர்.அதன்படி அஜித்தின் துணிவு படத்தின் ட்ரைலர் வெளியாகிய 23 மணி நேரத்தில் 3 கோடி பார்வையாளர்களை பெற்று பெரும் சாதனை படைத்துள்ளது,இந்த சாதனையை வாரிசு முறியடிக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் வாரிசு ட்ரைலர் வெளியாகிய 24 மணி நேரத்தில் 2.3 கோடி பார்வையாளர்களை மட்டுமே பெற்று துணிவு ட்ரைலரிடம் தோல்வியுற்றுள்ளதால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in