The Indian Times

இது படம் இல்லை.. நாடகம்… வாரிசை வச்சி செய்யும் நெட்டிசன்கள்…பறக்கும் மீம்ஸ்கள்

தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்றால் அது தளபதி விஜய் மட்டும் தான்.இவர் நடித்த அனைத்து படங்களும் கோடிகளில் வசூல் செய்து சாதனை படைத்தது வருகிறது.இவருக்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர் படம் வெளியாகும் நாள் தான் இவர்களுக்கு தீபாவளி பொங்கல் எல்லாம் என்று கூறினால் மிகையாகாது.அந்த அளவிற்கு தளபதி விஜய் ரசிகர்கள் அவரை நேசித்து வருகின்றனர்.பல போராட்டங்கள் விமர்சனங்களை சந்தித்து எதிலும் விட்டுக்கொடுக்காமல் பின்வாங்காமல் தொடர்ந்து போராடி இன்று இவ்வளவு பெரிய இடத்தினை அடைந்துள்ளார்.

Advertisement

இவரின் 66வது படத்தினை தோழா படத்தினை இயக்கிய வம்சி இயக்கியுள்ளார்.வாரிசு என இப்படத்திற்கு படக்குழு பெயரிட்டுள்ளது.இப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிக்கா நடித்து வருகிறார்.மேலும் சரத்குமார் ,ஷியாம் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார்.அண்மையில் இப்படத்தின் இசைவெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.தற்போது நேற்று இப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றாலும் சினிமா ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

தற்போது வாரிசு படத்தின் ட்ரைலரை பார்த்த நெட்டிசன்கள் படத்தினை பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.இது படமா இல்லை நாடகமா என கூறி கேலி செய்து மீம்ஸ்களை வெளியிட்டு வருகின்றனர்.மேலும் தெலுங்கு படத்தினை டப்பிங் செய்துள்ளது போல உள்ளது என கூறி பெரும் நெகட்டிவ் விமர்சனங்களை ட்ரைலருக்கு கொடுத்து வருகின்றனர்.இருப்பினும் இன்னொருபக்கம் ட்ரைலர் தொடர்ந்து அதிக பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்தது வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in