The Indian Times

வேலாயுதம் பட விஜய் தங்கையின் குடும்ப புகைப்படங்கள்

குழந்தை நட்சத்திரமாக காதலுக்கு மரியாதை படத்தில் நடித்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் அறிமுகம் ஆகியவர் நடிகை சரண்யா மோகன்.இதனை தொடர்ந்து பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.பின்னர் படிப்படியாக வளர்ந்து துணை நடிகையாக மாறினார்.

யாரடி நீ மோகினி படத்தில் நயன்தாராவுக்கு தங்கையாக நடித்து நல்ல வரவேற்பினை பெற்றார்.அதை தொடர்ந்து ஜெயம்கொண்டான் படத்திலும் நடித்து நல்ல வரவேற்பினை பெற்றார்.

Advertisement

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தினை தேடி வந்த சரண்யாவிற்கு,சுசீந்திரனின் புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.அப்படி சரண்யா நடிப்பில் வெளியாகிய படம் தான் வெண்ணிலா கபடி குழு.

இப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.இதனை தொடர்ந்து இவருக்கு தமிழ் சினிமாவில் படவாய்ப்புகள் வர தொடங்கியது.

இவர் யாரடி நீ மோகினி படத்தில் நடிகை நயன்தாராவுக்கு தங்கையாக நடித்து அசத்தியிருப்பார்,இப்படத்தில் குறைந்த நேரத்திற்கு மட்டுமே வந்தாலும் தனுஷை காதலிக்கும் காட்சிகள் மற்றும் பாலக்காடு பக்கத்திலே என்ற பாடலுக்கும் நடனம் ஆடி பட்டையை கிளப்பி இருப்பார்.

இப்படத்தில் இவருக்கு கிடைத்த வரவேற்பு இவரை தளபதி விஜய்க்கே தங்கை ஆக்கியது.வேலாயுதம் படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்து தூள் கிளப்பியிருப்பார்.இருவரையும் பார்க்க உண்மையான அண்ணன் தங்கை போலவே இருப்பதாக ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இவ்வாறு தமிழில் ஹிட் கொடுத்து வந்த இவர் மலையாளம்,தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார்.இந்நிலையில் இவர் தற்போது திருமணம் முடிந்து பெண் குழந்தை உள்ளது.நடிப்பில் இருந்து விலகி குடும்பம் மற்றும் குழந்தைகள் என செட்டில் ஆகிவிட்டார் சரண்யா மோகன்.இவரின் குடும்ப புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in