The Indian Times

மறைந்த கணவர் பிறந்தநாளை ஆஷ்ரமத்தில் கொண்டாடிய சீரியல் நடிகை ஷ்ருதி

சாதாரண குடும்பத்தில் பிறந்து சினிமாவில் எதாவது சாதிக்க வேண்டும் என வாய்ப்பு தேட ஆரம்பித்தவர் சுருதி சண்முக பிரியா. எந்தவித சினிமா பின்னணியும் இல்லாமல் தன்னம்பிக்கையை மட்டும் மையமாக வைத்து வாய்ப்பு தேடினார்.

தேடிய வாய்ப்புகளுக்கு பயனாக பிரபல நாடக இயக்குனர் திருமுருகன் இயக்கும் புதிய நாடகத்தில் ஸ்ருதிக்கு வாய்ப்பு கிடைத்தது. இயக்குனர் திருமுருகன் மெட்டி ஒலி என்ற நாடகத்தினை இயக்கி பெரும் வரவேற்பினை மக்களிடம் பெற்றுள்ளார்.

Advertisement

அதிக குடும்ப தலைவிகள் இவரது ரசிகர்கள் ,இவர் நாடகத்தில் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் பிரபலம் ஆகிவிடலாம் என கிடைத்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்த வேண்டும் என நாதஸ்வரம் நாடகத்தில் நடித்து சின்னத்திரையில் அடியெடுத்துவைத்தார் ஸ்ருதி சண்முக பிரியா.அறிமுகமாகிய முதல் நாடகத்திலேயே தமிழக மக்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றார்.

இதனை தொடர்ந்து தொடர்ச்சியாக நாடகங்கள் நடிக்க தொடங்கினார்.அதன்படி வாணி ராணி, கல்யாண பரிசு, பாரதி கண்ணம்மா ஆகிய தொடர்களில் நடித்து நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றார்.

எந்த சினிமா பின்னணியும் இல்லாமல் தனது கடின உழைப்பினால் வாய்ப்பு தேடி அலைந்து,கிடைத்த சரியான வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு இன்று இந்தளவிற்கு உயர்ந்துள்ளார்.

இந்நிலையில் பிரெஞ்சு படிப்பு மேல் தனி கவனம் செலுத்தி படித்து வந்ததால் நாடகங்களில் நடிப்பதில் இருந்து விலகினார்.இவர் இந்த ஆண்டு தொடக்கத்தில் பாடி பில்டர் ஆன அரவிந்த் சேகர் என்பவருடன் திருமணம் ஆகியது.

திருமணம் ஆகி ஒரே வருடத்தில் இவரது கணவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். தற்போது கணவரின் பிறந்தநாளை ஆஷ்ரமத்தில் கொண்டாடி உள்ளார்.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in