தோத்தவன் செத்துருவான்..ஜெயிச்சவன் மட்டும் தான் உயிரோட இருப்பான்..VIJAY ANTONY & ARUN VIJAY நடிக்கும் அக்னிசிறகுகள் TEASER

நடிகர் அருண் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்,இவர் தற்போது இயக்குனர் ஹரி இயக்கத்தில் யானை படத்தில் நடித்துள்ளார்.இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.இப்படத்தினை தொடர்ந்து வரிசையாக படங்களில் நடித்து வருகிறார்.அதேபோல் இசையமைப்பாளராக இருந்து சினிமாவில் முன்னணி கதாநாயகனாக உருமாறியுள்ளவர் விஜய் அன்டனி,இவர் தற்போது பிச்சைக்காரன் 2 படத்தினை இயக்கி நடித்துள்ளார்.இந்த இருவரும் தேர்ந்தெடுக்கும் படங்கள் வித்தியாசமான கதை களத்தில் இருப்பது ரசிகர்கள் ரசிக்க வைப்பதாக இருக்கும்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  ரசிகருக்கு போன் செய்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறிய தல அஜித்...வைரலாகும் வீடியோ

தோத்தவன் செத்துருவான்..ஜெயிச்சவன் மட்டும் தான் உயிரோட இருப்பான்..VIJAY ANTONY & ARUN VIJAY நடிக்கும் அக்னிசிறகுகள் TEASER 1

விளம்பரம்

தற்போது இந்த இருவரும் இணைந்து படம் நடித்தால் எப்படி இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்த வண்ணம் தற்போது அந்த எண்ணம் நிறைவேறியுள்ளது.மூடர் கூடம் படத்தினை இயக்கிய நவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி ,மற்றும் அருண் விஜய் இணைந்து நடித்துள்ள படம் அக்னி சிறகுகள்.இப்படத்திற்கு கப்பல் படத்திற்கு இசையமைத்த நடராஜன் சங்கரன் இசையமைத்துள்ளார்.அம்மா கிரியேஷன் இப்படத்தினை தயாரித்துள்ளது.படத்தில் கதாநாயகியாக அக்ஷரா ஹாசன் நடித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  அடேங்கப்பா!!! நான்காவது வாரத்திலும் இத்தனை திரையங்குகளில் ஓடுகிறதா விக்ரம்..

தோத்தவன் செத்துருவான்..ஜெயிச்சவன் மட்டும் தான் உயிரோட இருப்பான்..VIJAY ANTONY & ARUN VIJAY நடிக்கும் அக்னிசிறகுகள் TEASER 2

விளம்பரம்

இப்படத்தின் ட்ரைலர் எப்பொழுது வெளியாகும் என காத்திருந்த நிலையில் தற்போது படக்குழு படத்தின் டீசரை வெளியிட்டுள்ளது.படம் முழுவதும் வெளிநாட்டில் படமாக்கப்பட்டுள்ளது டீசரை பார்க்கும் பொழுது தெரிகிறது.இப்படத்தின் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. மேலும் இதில் யார் கதாநாயகன் யார் வில்லன் அல்லது ரெண்டு பேரும் கதாநாயகர்களா என்பது தெரியவில்லை இது படத்திற்கான எதிர்பார்ப்பினையும் அதிகரிக்க செய்துள்ளது.

கட்டாயம் படிக்கவும்  விக்கி ஒழுங்கா நில்லு நான் போட்டோ எடுக்கணும் ..கணவரை புகைப்படம் எடுக்கும் நயன்தாரா..

விளம்பரம்

Embed video credits : saregama tamil

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment