The Indian Times

லோக்கலாக மாறிய ஜெயம் ரவி..Vere Level-லில் கலக்கி இருக்கும் ஜெயம் ரவியின் அகிலன் பட Making Video

நடிகர் ஜெயம் ரவி தமிழ் சினிமா தவிர்க்க முடியாத முன்னணி நடிகர்,ஜெயம் படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்து இன்று சினிமாவில் உச்ச இடத்தினை பிடித்துள்ளார்.முதல் படமே ஜெயம் என்பதால் ரவியுடன் ஜெயம் பெயரில் மட்டுமல்ல படத்திலும் இணைந்து விட்டது.இவர் அண்ணன் ஜெயம் ராஜாவை வைத்து சினிமாவிற்குள் நுழைந்து இருந்தாலும் தனது கடின உழைப்பு மற்றும் நடிப்பினால் மட்டுமே இந்த உயரத்தினை அடைந்துள்ளார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

Advertisement

வாய்ப்பு பலராலும் ஏற்படுத்தி தர முடியும் ஆனால் திறமை இருந்தால் மட்டுமே முன்னேற முடியும் என்பதற்கு இவர் ஒரு எடுத்துக்காட்டு.மிருதன்,டிக் டிக் டிக் போன்ற திரைப்படங்களில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுக்க மக்களை வெகுவாக கவர்ந்தார்.இவர் நடிப்பில் வெளியாகிய தனி ஒருவன் படம் இவருக்கு பெரிய திருப்புமுனையாக சினிமாவில் இருந்தது.ஆதி பகவன் படத்தில் இரட்டை வேடங்களில் நடித்து அசத்தியிருப்பார் ஜெயம் ரவி.அதிலும் குறிப்பாக பகவான் கதாபாத்திரத்தில் அடித்து துவைத்து இருப்பார்.

Advertisement

இந்நிலையில் தற்போது ஜெயம் ரவி பூலோகம் பட இயக்குனர் கல்யாண கிருஷ்ணன் உடன் இணைந்து மீண்டும் படம் நடித்துள்ளார்.இப்படத்திற்கு அகிலன் என பெயரிடப்பட்டுள்ளது.தூத்துக்குடி மாவட்டத்தினை சுற்றி இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் தற்போது படபிடிப்பு நிறைவடைந்துள்ளது.படத்தில் கதாயாகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.சாம் சி எஸ் இசையமைத்துள்ளார்.இப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.இப்படத்தில் கப்பலில் பணியாற்றுகிறார் ஜெயம் ரவி என்பது படத்தின் மேக்கிங் வீடியோவை பார்க்கும் பொழுதே தெரிகிறது.தற்போது ஜெயம் ரவியின் அகிலன் எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது.

Embed video credits : think music india

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in