The Indian Times

வியர்க்க விறுவிறுக்க யோகா செய்த சூப்பர் ஸ்டார் மகள் ஐஸ்வர்யா ரஜினி

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது.இவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். 3 படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியவர்.இப்படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.தனது முதல் படத்தின் மூலமே உலகளவு பிரபலமாகினார் ஐஸ்வர்யா.இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒய் திஸ் கொலைவெறிடி பாடல் உலகம் முழுவதும் பட்டிதொட்டி எங்கும் பரவியது.இப்படத்தினை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிகர் கவுதம் கார்த்திகை வைத்து வை ராஜா வை என்ற திரை படத்தினை இயக்கினார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

Advertisement

இப்படத்திற்கு பிறகு இவர் குடும்ப வாழ்க்கையினை முழுவதுமாக கவனித்துக்கொண்டதால் படம் இயக்கவிலை.சினிமாவிற்கு நீண்ட இடைவெளியை இவர் விட்டார்.தற்போது முன்னாள் கணவர் தனுஷ் உடன் விவாகரத்து ஆன நிலையில் யோகா மற்றும் உடற்பயிற்சியில் இறங்கியுள்ளார் ஐஸ்வர்யா.அண்மையில் இவர் இயக்கிய ஆல்பம் வீடியோ நல்ல வரவேற்பினை பெற்றது.தற்போது மீண்டும் படங்களை இவர் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.விரைவில் இதுகுறித்து தகவல்களை எதிர்பார்க்கலாம்.

Advertisement

தற்போது இன்று சர்வதேச யோகா தினம் என்பதால் பலரும் யோகா செய்து வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.ஏற்கனவே உடற்பயிற்சி ,யோகா மற்றும் சைக்கிளிங்கில் அதிக கவனம் செலுத்தி வரும் ஐஸ்வர்யா ரஜினி இன்று யோகா செய்து அதனை வீடியோ எடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.இந்த வீடியோவில் வியர்க்க விறுவிறுக்க இவர் செய்த யோகா நம்மளையும் யோகா செய்வதற்கு தூண்டுவது போல அமைந்துள்ளது.இந்த வீடியோவில் இவரது ரசிகர்கள் சூப்பர் என கருத்து தெரிவித்து வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in