The Indian Times

இன்று வாரிசு செட்டில் தளபதி விஜயுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தினை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறிய பிரபலம்….

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே தமிழ் சினிமாவில் உள்ளது. தற்போது விஜய் படங்கள் என்றாலே அவை சரியாக ஓடாவிட்டாலும் பாக்ஸ் ஆபிசில் பல கோடிகளை வசூலித்து சாதனை படைத்தது வருகிறது. இதனால் இவர் படத்தினை தயாரிப்பதற்கு தயாரிப்பாளர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.அண்மையில் இவர் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார்.இப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகியது.இருப்பினும் மக்களிடம் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை,அதே சமயம் வசூலிலும் எந்த சரிவும் இல்லை.

Advertisement

தற்போது விஜய் தெலுங்கு பக்கம் இறங்கியுள்ளார்.தெலுங்கு சினிமா இயக்குனர் வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் தனது 66வது படமான வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தில் படத்தில் கதாநாயகியாக ராஷ்மிக்கா நடித்து வருகிறார்.மேலும் சரத்குமார் ,ஷியாம் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார்.தளபதி விஜயின் பிறந்தநாளை இன்று ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.இவரது பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் முதல் பார்வை போஸ்டர் மற்றும் பெயரினை நேற்று படக்குழு வெளியிட்டுள்ளது.

Advertisement

படத்தின் முதல் பார்வை போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இன்று தளபதி விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு பல ரசிகர்களும் நடிகர் நடிகைகளும் தங்களது வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்து வருகின்றனர்.படத்தின் இசையமைப்பாளரான தமன் இன்று தளபதி விஜயை வம்சி படப்பிடிப்பு தளத்தில் சந்தித்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.மேலும் அவருடன் எடுத்த புகைப்படத்தினை தற்போது தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இதில் தளபதி விஜய் மிகவும் இளமையாக உள்ளார்.இந்த புகைப்படத்தினை விஜய் ரசிகர்கள் வெகுவாக இணையத்தில் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in