தளபதி 66 படத்தின் பெயர் மற்றும் FIRST LOOK POSTER வெளியாகியது

தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்றல் அது தளபதி விஜய் மட்டும் தான்.இவர் நடித்த அனைத்து படங்களும் கோடிகளில் வசூல் செய்து சாதனை படைத்தது வருகிறது.இவருக்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர் படம் வெளியாகும் நாள் தான் இவர்களுக்கு தீபாவளி பொங்கல் எல்லாம் என்று கூறினால் மிகையாகாது.அந்த அளவிற்கு தளபதி விஜய் ரசிகர்கள் நேசித்து வருகின்றனர்.தளபதி விஜய் நாளை தனது பிறந்தநாளை கொண்டாட உள்ளார்.இதனை ஆண்டு தோறும் ரசிகர்களும் மக்களுக்கு இனிப்பு வழங்கி,உதவிகள் வழங்கி விஜயின் பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  58வயசில் 25 வயது பெண்ணை போல கலக்கும் நடிகை நதியாவின் அழகிய புகைப்படங்கள்

தளபதி 66 படத்தின் பெயர் மற்றும் FIRST LOOK POSTER வெளியாகியது 1

விளம்பரம்

தற்போது பல திரையரங்குகள் தளபதி விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ஹிட் படங்களான திருப்பாச்சி,மாஸ்டர் போன்ற படங்களை மீண்டும் ரிலீஸ் செய்து ரசிகர்களுடன் கொண்டாடி வருகின்றனர்.அண்மையில் விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர் தயாரிப்பில் வெளிவந்த பீஸ்ட் படம் பெரும் தோல்வியை சந்தித்தது.இருப்பினும் படம் வசூலில் எந்த குறையும் இல்லாமல் அடித்து நொறுக்கி தான் வருகிறது.இதனால் தனது அடுத்த படத்தில் உஷாராக நடித்து வருகிறார் விஜய்.இவரின் 66வது படத்தினை தோழா படத்தினை இயக்கிய வம்சி இயக்கி வருகிறார்.இப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிக்கா நடித்து வருகிறார்.மேலும் சரத்குமார் ,ஷியாம் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார்.நாளை ஜூன் 22 தளபதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு இன்று மாலை 6 மணிக்கு இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

கட்டாயம் படிக்கவும்  தளபதி விஜய் கட்டிய சாய் பாபா கோவிலில் ராகவா லாரன்ஸ் சுவாமி தரிசனம்

தளபதி 66 படத்தின் பெயர் மற்றும் FIRST LOOK POSTER வெளியாகியது 2

விளம்பரம்

இதனை தொடர்ந்து இன்று அனைவரும் எதிர்பார்த்த தளபதி விஜயின் 66வது படத்திற்கு வாரிசு என பெயரிடப்பட்டுள்ளது.இன்று இப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.இந்த முதல் பார்வை போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.முதல் பார்வை போஸ்டரை பார்த்த ரசிகர்கள் கொண்டாட்டத்தின் உச்சிக்கே சென்றுவிட்டனர்.படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்து உள்ளனர்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment