The Indian Times

தல அஜித் school பையனாக நடித்த இந்த விடியோவை பார்த்திருக்கிறீர்களா?

இன்று மே 1 உழைப்பாளர் தினம் என்று கொண்டாடுவதை விட தல அஜித்தின் பிறந்த நாள் என்று தான் தமிழ் நெஞ்சங்கள் கொண்டாடி வருகின்றனர்.தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை வைத்திருக்கும் நடிகர்களில் ஒருவர் தல அஜித். அல்டிமேட் ஸ்டார் என்ற பெயருக்கு ஏற்றவாறு தனக்குள் பல திறமைகளை ஒளித்து வைத்துள்ளார் தல அஜித். எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் சினிமா துறையில் கால் பதித்து, விமர்சனங்களுக்கு மத்தியில் பல வெற்றி படங்களை கொடுத்து அசைக்கமுடிய இடத்தை ரசிகர்கள் மனதில் பிடித்துள்ளார் நடிகர் அஜித்.

Advertisement

சினிமாவில் நடிப்பது மட்டுமல்லாமல் கார் ரேஸ் , பைக் ரேஸ் ஓட்டுவதிலும் தல கிங்கு தான். இதை தொறந்து அஜித்தின் அடுத்த படமான வலிமை படத்திற்காக தல ரசிகர்கள் ஆர்வமாக காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் முதலில் அஜித் காதல் படங்களாகவே தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். அந்த படங்கள் அனைத்தும் அவருக்கு மக்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்று தந்தது. இந்நிலையில் தற்போது அஜித் முதல் முதலில் பள்ளி மாணவனாக நடித்த என் வீடு என் கணவர் என்ற திரைப்படத்தின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in