The Indian Times

ஸ்டாலின் அவர்களுக்கு ட்வீட் போட்டதை கிண்டலடித்த நெட்டிசன்கள்! பதிலடி கொடுத்த பிரியா பவானி ஷங்கர்

இன்றைய தமிழ் சினிமா ரசிகர்களை தன் வசம் இழுத்து , செய்தி வாசிப்பாளராக இருந்து கதாநாயகியாக உருவெடுத்தனர் ப்ரியா பவானி ஷங்கர். தற்போது பல இளைஞர்களுக்கு ட்ரீம் girl ஆகா இருக்குஇம் ப்ரியா பவானி ஷங்கர் செய்த காரியம் தற்போது மிக பெரிய பேசும் பொருளாக மாறியுள்ளது.

Advertisement

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் முடிவுகள் சமீபத்தில் வெளியானது. தி.மு.க தலைவர் ஸ்டாலின் பத்து வருடங்களுக்கு பிறகு தமிழகத்தில் தற்போது ஆட்சியை பிடித்துள்ளார். இவரது விடா முயற்சியை பாராட்டும் விதமாக தற்போது வரும் 7ஆம் தேதி அன்று தி.மு.க தலைவர் ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்க இருக்கும் நிலையில் அவருக்கு பல பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

இந்நிலையில் நடிகை பிரியா பவனி ஷங்கர் ஸ்டாலின் அவர்களுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தார். நீண்ட காலத்துக்கு பிறகு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தமிழ்நாடு.

பேரிடரிடையே பதவி ஏற்றாலும் இங்கிருந்து சிறப்பாக வழிநடத்துவீர்கள் என்று சாமானியர்கள் முன் எப்போதையும் விட பல மடங்கு நம்பிக்கையுடன் உங்களை பார்த்துக்கொண்டிருக்குறோம்.வாழ்த்துகள் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதில் ப்ரியா பவானி ஷங்கரை கலாய்க்கும் விதமாக பல நெட்டிசன்கள் ட்வீட் செய்தாலும், அதற்கு பதிலளிக்கும் விதமாக பிரியா பதிலடி கொடுத்துள்ளார். தற்போது இந்த செய்தி வைரலாக பரவி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in