The Indian Times

தல AUTOGRAPH போடுங்க…PARIS-ல் அஜித்தை சுற்றிவளைத்த ரசிகர்கள்…

நடிகர் அஜித்குமாருக்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர் படம் வெளியாகும் நாள் தான் இவர்களது ரசிகர்களுக்கு திருவிழா ,தீபாவளி பொங்கல் எல்லாம் என்று கூறினால் மிகையாகாது.அந்தளவிற்கு அஜித் மேல் தீராத அன்பு கொண்டவர்களாக உள்ளனர் இவர்கள் ரசிகர்கள் .அண்மையில் இவரின் நடிப்பில் வெளியாகிய வலிமை திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது .வசூலிலும் சாதனை படைத்துள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.தற்போது அஜித் மீண்டும் இயக்குனர் வினோத் இயக்கத்தில்,போனிகபூர் தயாரிப்பில் மூன்றாவது முறையாக புதிய படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் பிசியாக நடைபெற்று வருகிறது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

அஜித்குமார் தனது 61வது படத்திற்கு கடினமாக உழைத்து வருகிறார்.இவரது வலிமை படத்தில் இவரது உடல் பருமன் குறித்து கேலி செய்து வந்தனர் அவர்களுக்கு பதிலடி கொடுப்பதுபோல் தல அஜித் தற்போது உடல் எடையை குறைத்துள்ளார்.ஏற்கனவே இதுபோல வேதாளம் படத்தில் இவரை உருவ கேலி செய்ததற்கு விவேகம் படத்தில் உடல் எடையை குறைத்து பார்ப்பவர்களை கதிகலங்க செய்தார்.தற்போது வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகும் இப்படத்தில் அஜித் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்நிலையில் நடிப்பிற்கு சிறிய இடைவெளிட்டு அஜித் வெளிநாடு சென்றுள்ளார்.தற்போது அஜித் 61வது படப்பிடிப்பு மீண்டும் சென்னையில் தொடங்கி நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

இந்நிலையில் அஜித் குமார் வெளிநாட்டில் இருந்த பொழுது பாரிஸில் அமைந்துள்ள உலக அதிசயங்களில் ஒன்றான ஈபிள் டவரை சுற்றி பார்க்க சென்றுள்ளார்.அங்கு அவரை அடையாளம் கண்டுகொண்ட ரசிகர்கள் அவரை சுற்றி வளைத்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்துள்ளனர்.அவர்களுடன் அஜித்குமா நன்றாக பேசியும் அவர்களுக்கு ஆட்டோகிராப்பும் போட்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவு ட்ரெண்ட் ஆகி வருகிறது.அஜித் குமார் புகைப்படம் வந்தாலே ட்ரெண்ட் ஆக்கும் ரசிகர்கள் மத்தியில் வீடியோ கிடைத்தால் கேட்கவா வேண்டும் இந்த வீடியோவை அஜித் ரசிகர்கள் வெறித்தனமாக வீடியோவை இணையத்தில் ஷேர் செய்து வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in