உலகநாயகனை இயக்கிய LOKESH KANAGARAJ… விக்ரம் MAKING

தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர் உலகநாயகன் கமல்ஹாசன்.இவருக்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.களத்தூர் கண்ணம்மா முதல் விக்ரம் வரை தனது ஒவ்வொரு படத்திலும் புதியதாக எதையாவது செய்து மக்களை மகிழ்விக்க நினைப்பார். எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா அதே கதாபாத்திரமாக மாரி அனைவரையும் வாயடைக்க செய்துவிடுவார் இவர்.தற்போது கமல்ஹாசன் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது நடித்திருக்கும் திரைப்படம் விக்ரம்.இப்படத்தினை இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.அனிருத் இசையமைத்துள்ளார்.படத்தினை கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் நிறுவனம் தயாரித்துள்ளது.இப்படத்தில் இவருடன் பகத் பாசில்,விஜய் சேதுபதி,காளிதாஸ் ஜெயராம் மற்றும் நரேன் ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படம் கடந்த ஜூன் மாதம் 3 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்தது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  HEROINE போல ஆளே மாறிய CWC மோனிஷா

உலகநாயகனை இயக்கிய LOKESH KANAGARAJ... விக்ரம் MAKING 1

விளம்பரம்

படத்தின் வெற்றியை உலகநாயகன் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.எப்படி இத்தனை ஆண்டுகள் கழித்து படம் நடித்தும் வெற்றிபெற முடிகிறது என சினிமா பிரபலங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார் உலகநாயகன்.உலகம் முழுவதும் வசூல் வேட்டையை இப்படம் நடத்தி வருகிறது.தமிழகத்தில் பாகுபலி வசூல் சாதனையை குறைந்த நாட்களிலேயே முறியடித்து மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளார் கமல்ஹாசன்.படம் 400 கோடி வசூலை நெருங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த வெற்றி என்பதால் கமல்ஹாசன் உச்ச மகிழ்ச்சியில் உள்ளார்.மேலும் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு கார் பரிசாக வழங்கியுள்ளார்.அதேபோல் துணை இயக்குனர்கள் 13 பேருக்கு பைக்குகளை பரிசாக வழங்கியுள்ளார்.நடிகர் சூர்யாவிற்கு ரோலெக்ஸ் வாட்சினை அன்பளிப்பாக கொடுத்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  தமிழ் புத்தாண்டை கொண்டாடிய தமிழ் சினிமா நட்சத்திரங்கள்

உலகநாயகனை இயக்கிய LOKESH KANAGARAJ... விக்ரம் MAKING 2

விளம்பரம்

ஒவ்வொரு படத்திலும் புதிய மெனக்கெடல்கள் எடுத்து உலகநாயகன் ரசிகர்களுக்காக கடினமாக உழைத்து வருகிறார்.ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும் என்பதே அவரது கொள்கை மற்றும் குறிக்கோளாக உள்ளது.தற்போது விக்ரம் திரைப்படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகியுள்ள திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிவருகிறது.இதுதான் உலகநாயகனின் உண்மையான தசாவதாரம் ஆகும்.தற்போது விக்ரம் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோவை படக்குழு பகிர்ந்துள்ளது.ஒவ்வொரு காட்சியிலும் லோகேஷ் கனகராஜ் ஒவ்வொரு நடிகரையும் வடிவமைத்துள்ளதினை இந்த மேக்கிங் வீடியோவில் காணலாம்.

கட்டாயம் படிக்கவும்  SUNDARI சீரியல் நாயகி கேபிரியலின் தாறுமாறான Modern புகைப்படங்கள்

விளம்பரம்

Embed video credits : Disney plus hotstar tamil

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment