சூர்யா பாலா கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் பெயரை வெளியிட்டது படக்குழு…TITLE LOOK POSTER OUTNOW

நடிகர் சூர்யா நேருக்கு நேர் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தவர் .இப்படத்தில் இவருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.இதனை தொடர்ந்து பல படங்களில் தொடர்ச்சியாக சூர்யா நடித்து வந்தார்.இவர் நடித்த அனைத்து படங்களிலும் இவருக்கு நடிகர் என்ற அந்தஸ்து கிடைத்ததே தவிர முக்கிய நடிகர் என்ற அந்தஸ்து கிடைக்கவில்லை.அதற்காக போராடிக்கொண்டிருக்கும் பொழுதுதான் இயக்குனர் பாலாவின் நந்தா படத்தில் வாய்ப்பு கிடைத்தது.தனது நடிப்பு திறமையை மொத்தமாக காண்பித்த நடிகர் சூர்யாவிற்கு இப்படம் அவரது சினிமா வாழ்க்கையில் ஒரு மைல்கல் ஆக அமைந்தது.இந்த படத்தின் மூலம் சூர்யா முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தினை அடைந்தார்.

கட்டாயம் படிக்கவும்  அமெரிக்காவில் கோவிலுக்கு சென்ற பாடகர் செந்தில் ராஜலக்ஷ்மி

சூர்யா பாலா கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் பெயரை வெளியிட்டது படக்குழு...TITLE LOOK POSTER OUTNOW 1

விளம்பரம்

இதனை தொடர்ந்து அவர் நடித்த படங்கள் அனைத்தும் வெற்றியை அளித்தது.அதனை தொடர்ந்து மீண்டும் பாலா இயக்கத்தில் பிதாமகன் படத்தில் நடித்தார்.இப்படம் நல்ல வரவேற்பினை பெற்றது.இந்நிலையில் நடிகர் சூர்யா பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இயக்குனர் பாலா உடன் கைகோர்த்துள்ளார்.சூர்யாவின் 41வது படத்தினை இயக்குனர் பாலா இயக்கி வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளதாகவும்,இதனால் சூர்யா படப்பிடிப்பில் இருந்து பாதிலேயே கிளம்பி வந்துள்ளதாகவும் தகவல் பரவியது.இந்நிலையில் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகர் சூர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டார்.அதன்பின் வதந்திகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் சென்றனர்

கட்டாயம் படிக்கவும்  விஷால் மிரட்டும் ரத்னம் பட TRAILER வெளியாகியது

சூர்யா பாலா கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் பெயரை வெளியிட்டது படக்குழு...TITLE LOOK POSTER OUTNOW 2

விளம்பரம்

இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரியில் முடிவடைந்துள்ளார்,இரண்டாவது கட்ட படப்பிடிப்பு மதுரையில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.இந்நிலையில் இன்று இயக்குனர் பாலா பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு படத்தின் பெயரை வெளியிட்டுள்ளது.சூர்யாவின் இந்த 41வது படத்திற்கு படக்குழு வணங்கான் என பெயரிட்டுள்ளது.தற்போது இந்த டைட்டில் லுக் இணையத்தில் வைரலாகி வருகிறது.சூர்யா ரசிகர்களிடம் வணங்கான் படத்தின் பெயர் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment