The Indian Times

திரும்ப வந்த சீயான் விக்ரம்…கோப்ரா AUDIO LAUNCH-ல் MASS ENTRY கொடுத்து அதிரவிட்டார்

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் விக்ரம்.நடிப்பிற்காக எந்த எல்லைக்கும் செல்ல கூடியவர் இவர்.இவருக்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.சாதரண நடிப்பு தானே அதற்கு இத்தனை மெனக்கெடல்கள் தேவையா என்று நினைக்காமல் அந்த கதாபாத்திரமாகவே வாழ்பவர்.1990 ஆம் ஆண்டு என் காதல் கண்மணி என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தவர் இவர்.தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தாலும் இவருக்கான வரவேற்பு எந்த சினிமாவிலும் கிடைக்கவில்லை தமிழ் படம் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் படங்களிலும் நடித்துள்ளார்.1999 ஆம் ஆண்டு இயக்குனர் பாலா இயக்கத்தில் சேது படத்தில் விக்ரம் நடித்தார்.இப்படத்தில் அவருடைய மொத்த உழைப்பையும் போட்டு தமிழ் சினிமாவையே அலற வைத்தார்.இப்படம் மாபெரும் வெற்றி கண்டது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இப்படத்தினை தொடர்ந்து இவர் ரசிகர்களால் சீயான் என செல்லமாக அழைக்கப்பட்டார்.தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் இவர்.பல நடிகர்களும் எப்படி நடிக்க வேண்டும் என்பதை விக்ரமை பார்த்து தான் கற்றுக்கொண்டதாக கூறும் அளவிற்கு நடிப்பிற்கு பெயர் போனவர்.தற்போது இவர் நடிப்பில் அடுத்ததாக கோப்ரா மற்றும் பொன்னியின் செல்வன் வெளியாக உள்ளது.இதனால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.இவர் திரையில் தோன்றி நீண்ட இடைவெளி ஆனதால் ரசிகர்கள் வெறித்தனமாக காத்துகொண்டு இருக்கின்றனர்.சில தினங்களுக்கு முன்பு திடீரென உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இது சினிமா உலகிற்கும் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Advertisement

இதனால் அவர் பொன்னியின் செல்வன் டீசர் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள முடியாமல் சென்றது.தற்போது உடல்நலம் சரியாகி மீண்டும் விக்ரம் பழைய நிலைமைக்கு வந்துள்ளார்.இந்நிலையில் இவர் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடித்த கோப்ரா படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.உடல்நலம் சரியாகி மீண்டும் நிகழ்ச்சிக்கு மாஸ் ஆக என்ட்ரி கொடுத்து ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

Embed video credits : cineulagam

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in