The Indian Times

தல அஜித்தின் துணிவு படத்தை விடாமல் துரத்தி கிண்டல் செய்யும் BLUESATTAI மாறன்…..

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர்.இவருக்கென பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.இவர் படம் வெளியாகும் நாள் தான் ரசிகர்களுக்கு தீபாவளி மற்றும் பொங்கல் எல்லாம்.அந்த அளவிற்கு அஜித்குமார் மீது இவரது ரசிகர்கள் அளவுகடந்த அன்பு மற்றும் பாசத்தினையும் வைத்துள்ளனர்.இதற்கு முழுக்க காரணம் அஜித்,ஏனென்றால்,முதலில் உன் குடும்பத்தினை பார்த்துக்கொள் அடுத்து வந்து என் படத்தினை பார் என்று ரசிகர்களுக்கு அவர் அன்பாக கூறும் அறிவுரையே அஜித் பின்னால் இத்தகைய கூட்டத்தினை கூட்டியுள்ளது.

Advertisement

நடிகர் அஜித் நடிப்பில் அண்மையில் வெளியாகிய வலிமை திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.மேலும் குடும்பத்தினரும் இப்படத்தினை பெரிதளவு கொண்டாடினர்.வலிமை படத்தின் வெற்றிக்குப்பிறகு தற்போது மூன்றாவது முறையாக இயக்குனர் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் குமார் தனது 61 வது படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்திற்கு துணிவு என படக்குழு பெயரிட்டுள்ளது.கதாநாயகியாக மஞ்சு வாரியார் நடித்துள்ளார்,ஜிப்ரான் இசையமைத்துள்ளார் ,போனி கபூர் இப்படத்தினையும் தயாரித்துள்ளார்

Advertisement

இப்படத்தின் ட்ரைலர் நேற்று வெளியாகியுள்ளது.ட்ரைலர் பல ரசிகர்களை கவர்ந்தாலும் ஒருசில ரசிகர்களிடம் நெகட்டிவ் விமர்சனங்களை தான் பெற்றுள்ளது.மேலும் நெட்டிசன்கள் இப்படம் பீஸ்ட் படத்தை போல இருப்பதாக கூறி மீம்ஸ்கள் போட்டு வருகின்றனர்.இந்நிலையில் சினிமா விமர்சகர் துணிவு ட்ரைலர் வெளியாகிய நாளில் இருந்து அதை கிண்டல் செய்து வருகிறார்.தற்போது இதுபோல் உள்ள வேறுபடத்தின் ட்ரைலரை எடுத்து தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டு எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு என கூறியுள்ளார்.இதற்கு அஜித் ரசிகர்களிடம் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in