The Indian Times

புத்தாண்டில் துள்ளிக்குதித்த கமல்ஹாசன்… அடடே மனுஷன் இன்னும் குழந்தையாவே இருக்காரே…

அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என சிறுவனாக சினிமாவில் தனது வாழ்க்கையை ஆரம்பித்தவர் கமல்ஹாசன். சிறுவனாக வந்து இன்று உலகநாயகன் என ஒரு சகாப்தத்தையே உருவாக்கியுள்ளார்.களத்தூர் கண்ணம்மா முதல் விக்ரம் வரை படங்களுக்கு படம் நடிப்பையும்,கேரக்டர்களையும் மாற்றி மாற்றி புதிய சாதனையை தமிழ் சினிமாவில் உருவாக்கியுள்ளவர் இவர்.

படத்தில் ஏற்கும் கதாபாத்திரமாகவே மாறி நடிப்பது தான் உலகநாயகன் வழக்கம்.அன்று முதல் இன்று வரை குறையாத ரசிகர்கள் கூட்டத்தினை கொண்டுள்ளார் இவர்.அண்மையில் சில வருடங்களாக நடிக்காமல் இருந்த கமல்ஹாசன் விக்ரம் படத்தில் மீண்டும் நடித்து தமிழ் சினிமாவையே வசூலில் ஆட்டம் காணவிட்டார்.இப்படத்திற்கு பிறகு இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

Advertisement

இந்தியன் 2 படப்பிடிப்பினை தொடர்ந்து இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் 35 ஆண்டுகள் கழித்து மீண்டும் புதிய படத்தில் நடிக்க உள்ளார்.இன்று புத்தாண்டு முன்னிட்டு கமல்ஹாசன் வெளியிட்டுள்ள புகைப்படம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.புகைப்படத்தில் கமல்ஹாசன் துள்ளிக்குதித்து அசத்தியுள்ளார்.இந்த புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு வயசே ஆகாத கமல் என கமெண்ட் செய்து வருகின்றனர்.மேலும் கமல் ரசிகர்கள் புகைப்படத்தினை இன்ஸ்டாகிராமில் ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in