The Indian Times

விக்கி…நீதான் எனக்கு முதல் பிள்ளை…கணவனை தோளில் சுமக்கும் நடிகை நயன்தாரா

தமிழ் சினிமாவில் ஐயா படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியவர் நடிகை நயன்தாரா. இப்படத்தில் நல்ல வரவேற்பினை பெற்று முதல் படத்திலேயே முன்னணி நடிகையாக உருவெடுத்தார். தமிழ் சினிமாவில் இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.தொகுப்பாளராக தான் வாழ்க்கையை தொடங்கியவர் இன்று இன்று தனது கடின உழைப்பினால் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தினை மக்களிடம் வாங்கியுள்ளார்.தற்போது இவர் கதாநாயகியாக மட்டும் இல்லாமல் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலும் நடித்து வருகிறார்.

Advertisement

இதில் நெற்றிக்கண் திரைப்படம் நேரிடையாக ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.தற்போது இதனை தொடர்ந்து மீண்டும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமான O2 படத்தில் நடித்திருந்தார்.இப்படம் அண்மையில் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.இதனை தொடர்ந்து அண்மையில் நயன்தாரா இயக்குனர் அஸ்வின் இயக்கத்தில் நடித்த கனெக்ட் திரைப்படம் வெளியாகி எதிர்பார்த்த வரவேற்பினை ரசிகர்களிடம் பெறவில்லை

Advertisement

தற்போது விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டு இரண்டு ஆண் குழந்தைகளை வாடகைத்தாய் மூலம் பெற்றுக்கொண்டுள்ளார்.தற்போது 2022 ஆம் ஆண்டு எடுத்த சிறந்த போட்டோக்களை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்,அதில் இரண்டு குழந்தைகளையும் நயன்தாரா நெஞ்சில் சுமந்து கணவனை தோளில் சுமந்துள்ளார்.இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் இந்த புகைப்படங்களை இணையத்தில் ஷேர் செய்து ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in