The Indian Times

தல அஜித் 61வது படத்தின் TITLE இதுதானா…பெயரே சும்மா தீயா இருக்கே

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர்.இவருக்கென பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.இவர் படம் வெளியாகும் நாள் தான் ரசிகர்களுக்கு தீபாவளி மற்றும் பொங்கல் எல்லாம்.அந்த அளவிற்கு அஜித்குமார் மீது இவரது ரசிகர்கள் அளவுகடந்த அன்பு மற்றும் பாசத்தினையும் வைத்துள்ளனர்.இதற்கு முழுக்க காரணம் அஜித்,ஏனென்றால்,முதலில் உன் குடும்பத்தினை பார்த்துக்கொள் அடுத்து வந்து என் படத்தினை பார் என்று ரசிகர்களுக்கு அவர் அன்பாக கூறும் அறிவுரையை அஜித் பின்னால் இத்தகைய கூட்டத்தினை கூட்டியுள்ளது.

Advertisement

நடிகர் அஜித் நடிப்பில் அண்மையில் வெளியாகிய வலிமை திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.மேலும் குடும்பத்தினரும் இப்படத்தினை பெரிதளவு கொண்டாடினர்.வலிமை படத்தின் வெற்றிக்குப்பிறகு தற்போது மூன்றாவது முறையாக இயக்குனர் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் குமார் தனது 61 வது படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தினை தொடர்ந்து லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார்.தற்போது 61வது படத்தின் படப்பிடிப்பில் நடிகர் அஜித்குமார் சிறிய இடைவெளிக்கு பிறகு கலந்துகொண்டுள்ளார்

Advertisement

அஜித் இயக்குனர் வினோத் இயக்கத்தில் நடிக்கும் 61வது திரைப்படத்திற்கு துணிவே துணை என்று பெயரிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.முன்னதாக வீரம் படத்தில் அஜித் குமார் ஓட்டும் காரில் இந்த பெயர் எழுதி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.இது அதிகாரபூர்வ தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.விரைவில் படக்குழு படத்தின் பெயரை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது,தற்போது இந்த பெயரே தீ போல உள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in