CELEBRITY-னா எப்படி வேணாலும் நடந்துக்கலாமா..CWC சிவாங்கியால் கடுப்பாகிய படக்குழு

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமாகியவர் சிவாங்கி.இவர் பிரபல பாடகி ஸ்ரீமதி பின்னி கிருஷ்ணகுமார் மகள் ஆவார்.விஜய் தொலைக்காட்சியில் போட்டியாளராக அறிமுகமாகி தனது குரலால் பல ரசிகர்களை கவர்ந்தார்.இவரின் குரலுக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.எப்பொழுதும் குழந்தை போல நகைச்சுவையாக சிவாங்கி வெளிப்படையாக பேசுவதால் பலருக்கும் பிடித்தமானவர் ஆகினார்.பெரும் பாடகியாக வேண்டும் என்பதே இவரது கனவு அதன்படி இவர் பல ஆல்பம் பாடல்களையும் பாடியுள்ளார்.இவரின் நகைச்சுவைக்கு அதிகளவில் ரசிகர்கள் உண்டு என்பதால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது.

கட்டாயம் படிக்கவும்  காஷ்மீரில் தேனிலவை கொண்டாடும் சீரியல் நடிகை ஷபானா ஆர்யன்

CELEBRITY-னா எப்படி வேணாலும் நடந்துக்கலாமா..CWC சிவாங்கியால் கடுப்பாகிய படக்குழு 1

விளம்பரம்

இவரது நகைச்சுவை திறமைக்கு சரியான சவாலாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கிடைத்த வாய்ப்பினை ஏற்றுக்கொண்டு அதை சரியாக பயன்படுத்தி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக களம் இறங்கினார்.தான் எதார்த்த பேச்சுகளினாலும் நகைச்சுவைகளினாலும் மக்களை சிரிக்க வைத்து அவர்களது இதயத்தில் நீங்காத இடத்தினை பிடித்தார்.தொடர்ந்து 3 சீசன்களாக இந்நிகழ்ச்சியில் கலக்கி வருகிறார் சிவாங்கி.இவர் அங்கு செய்யும் சேட்டைகளுக்கு அளவே இல்லை அந்த அளவிற்கு செட்டில் கலாட்டா செய்து வருகிறார்.இவரின் வெகுளி தனமான பேச்சினால் பல ரசிகர்களையும் சிரிக்க வைத்து தனது வசம் இழுத்தார்.இவருக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.அந்தளவிற்கு பிரபலம் ஆகிவிட்டார் சிவாங்கி.

கட்டாயம் படிக்கவும்  செம்ம மாஸாக மாறிய VIJAY TV GABY-ன் கலக்கலான புகைப்படங்கள்

CELEBRITY-னா எப்படி வேணாலும் நடந்துக்கலாமா..CWC சிவாங்கியால் கடுப்பாகிய படக்குழு 2

விளம்பரம்

தற்போது சிவாங்கி மீது சில புகார்கள் கிளம்பி இருக்கிறது.படப்பிடிப்பில் சிவாங்கி தனக்கு மேக்கப் செய்ய மேக்கப் மேனை அவரே கூட்டி வருவதாகவும்,அந்த மேக்கப் மேனுக்கு மட்டும் சம்பளம் 14ஆயிரம் ரூபாய் கொடுக்க கூறுவதாகவும் தகவல் வெளியகியுள்ளது மேலும் படப்பிடிப்பில் டிரஸ் பிடிக்கவில்லை என கிளம்பிவிட்டார்,அதனால் படப்பிடிப்பு நின்றுவிட்டதாக கூறப்படுகிறது.இவ்வாறு சிவாங்கி மேல் புகார்கள் எழும்பியுள்ளது.ஆனால் அவர் இப்படி செய்யும் ஆள் இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்ததே.இது அவர் வளர்ச்சி பிடிக்காமல் கிளப்பி விடும் கட்டுக்கதைகள் ஆக கூட இருக்கலாம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment