The Indian Times

மகள் AILA-வுக்கு சைக்கிள் வாங்கிக்கொடுத்து அழகு பார்த்த ALYA & SANJEEIV

ராஜா ராணி தொடரில் கதாநாயகி மற்றும் கதாநாயகனாக நடித்து பிரபலமாகியவர்கள் ஆல்யா மற்றும் சஞ்சீவ்.ராஜா ராணி என்று கூறினாலே நமது மனதில் முதலில் நினைவுக்கு வருவது இந்த ஜோடிகள் தான். சஞ்சீவ் முன்னதாக திரைப்படங்களில் நடித்து வந்தார்.இவர் முதன் முதலில் குளிர் 100 டிகிரி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமாகினார்.பின்னர் ராஜா ராணி நாடகத்தில் வாய்ப்பு கிடைக்கவே அதனை சரியாக பயன்படுத்தி கொண்டு நடித்து மக்களை கவர்ந்தார்.இந்த ராஜா ராணி நாடகத்தின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகியவர் தான் ஆல்யா.ஆரம்பத்தில் இருவரும் நட்பாக பழக இறுதியில் நட்பு காதலாக மாறி கல்யாணத்தில் முடிந்தது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இவர்களுக்கு ஏற்கனவே ஐலா என்ற அழகிய பெண் குழந்தை உள்ளது.தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்த ஆல்யாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.இதனால் இருவரும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.இவர்கள் தங்களது இனிமையான நேரங்களை மகன் மற்றும் மகள் உடன் செலவழித்து கொண்டு வருகின்றனர்.இருவரும் சொந்தமாக யூடியூப் சேனல் வைத்துக்கொண்டு அதில் அவர்கள் தங்கள் குழந்தைகளுடன் செலவு செய்யும் நேரத்தினை வீடியோவாக பதிவிட்டு மகிழ்ந்து வருகின்றனர்.தற்போது இன்று புதிய வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

Advertisement

அதன்படி இன்று இவர்கள் பதிவிட்ட வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.சஞ்சீவ் மற்றும் ஆல்யா இருவரும் தங்களது மகள் ஐலாவிற்கு புதியதாக சைக்கிள் வாங்கி கொடுத்துள்ளனர்.இந்த சைக்கிளை கண்ட ஐலா மகிழ்ச்சியில் துள்ளி குதித்துள்ளார்.குழந்தைகள் முதலில் ஆசைப்படும் பெரிய பொருள் என்றால் சைக்கிள் தான் அதில் அவர்கள் வாழ்க்கையை தொடங்கி இறுதியில் சொந்தமாக கார் வரைக்கும் வாங்கி ஓட்டுகின்றனர்,இதெற்கெல்லாம் முதல்படி அவர்கள் ஆசையாய் கேட்கும் சைக்கிள் தான்.தனது பெற்றோர்கள் வாங்கி கொடுத்த சைக்கிளை ஆசையாக ஓட்டுகிறார் ஐலா.இதனை வீடியோவாக எடுத்து தங்களது யூடியூப் சேனலில் பதிவிட்டுள்ளார் ஆல்யா சஞ்சீவ்.

Embed video credits : ALYA & SANJIEV

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in