The Indian Times

அடேங்கப்பா!!! நான்காவது வாரத்திலும் இத்தனை திரையங்குகளில் ஓடுகிறதா விக்ரம்..

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்திருக்கும் திரைப்படம் விக்ரம்.இப்படத்தினை இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.அனிருத் இசையமைத்துள்ளார்.படத்தினை கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் நிறுவனம் தயாரித்துள்ளது.இப்படத்தில் இவருடன் பகத் பாசில்,விஜய் சேதுபதி,காளிதாஸ் ஜெயராம் மற்றும் நரேன் ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படம் கடந்த ஜூன் 3 ஆம் தேதி வெளியாகியுள்ளது.வெளியாகிய நாள் முதல் படம் மக்களிடம் பலத்த வரவேற்பினை பெற்றுள்ளது.நான்காவது வாரம் ஆகியும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

Advertisement

படத்தின் வெற்றியை கமல்ஹாசன் கதாநாயகனாகவும்,தயாரிப்பாளராகவும் கொண்டாடி வருகிறார்.இதனால் இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் இயக்குனருக்கு கார் பரிசாக வழங்கியுள்ளார்.அதேபோல் துணை இயக்குனர்கள் 13 பேருக்கு பைக்குகளை பரிசாக வழங்கியுள்ளார்.மேலும் படத்தின் இறுதி நொடிகளில் நடித்து மாபெரும் வரவேற்பினை பெற்ற நடிகர் சூர்யாவிற்கு ரோலெக்ஸ் வாட்சினை அன்பளிப்பாக கொடுத்துள்ளார்.மேலும் அண்மையில் சென்னையில் படத்தின் வெற்றிகொண்டாட்டம் மிகப்பெரியளவு கொண்டாடப்பட்டுள்ளது

Advertisement

இப்படம் உலகம் முழுவதும் வசூல் வேட்டையை நடத்தி வருகிறது.உலகளவு இப்படம் 400 கோடி வரை வசூல் செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.இப்படம் வெளியாகி நான்கு வாரங்கள் ஆகியும் பல புதிய படங்கள் வெளியாகியும் இன்னும் தமிழகத்தில் மொத்தம் 140 திரையரங்குகளில் வெற்றிகரமாக விக்ரம் ஓடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கமல்ஹாசன் அடுத்தப்படத்தின் வேலையே ஆரம்பித்துவிட்டார்.விரைவில் அடுத்தப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பினை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in