The Indian Times

கோட் சூட் போட்டுட்டு கெத்தா நடந்து வந்த உலகநாயகன்…என்னப்பா இவருக்கு வயசே ஆகாதா…

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்திருக்கும் படம் விக்ரம்.இப்படம் உலகம் முழுவதும் வெளியாகி மாபெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.படத்தினை ராஜ் கமல் நிறுவனம் தயாரித்துள்ளது.அனிருத் இசையமைத்துள்ளார்.சூர்யா, விஜய் சேதுபதி, பகத் பாசில் என பல முன்னணி நட்சத்திரங்கள் படத்தில் நடித்துள்ளனர்.இப்படம் வெளியாகி சினிமா ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.25 நாட்களை கடந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது விக்ரம்.இப்படத்தின் வெற்றியை கமல்ஹாசன் தாறுமாறாக கொண்டாடி வருகிறார்.காரணம் நீண்ட இடைவெளிக்கு பிறகு வந்தால் மார்க்கெட் சிறியதாக அடிபடும் என்பதால் ஆனால் உலகநாயகன் புதிய மார்க்கெட்டையே உருவாக்கி இருக்கிறார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனருக்கு கார்,துணை இயக்குனர்கள் 13 பேருக்கு பைக்குகளை பரிசாக அளித்தார் கமல்ஹாசன்.அதேபோல் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த சூர்யாவிற்கு தனது 46 லட்ச ரூபாய் மதிப்பிலான ரோலக்ஸ் வாட்சினை பரிசாக அளித்துள்ளார்.படத்தின் வெற்றியினை கதாநாயகனாகவும் படத்தின் தயாரிப்பாளராகவும் கொண்டாடி வருகிறார் கமல்ஹாசன்.இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கமல்ஹாசன் அடுத்த படத்திற்கான வேலையில் களம் இறங்கி விட்டார்.இவரது அடுத்தப்படத்தினை இவரிடம் இயக்குனர் ஆக பணியாற்றியவர் தான் இயக்க இருப்பதாக அறிவித்திருந்தார்.

Advertisement

தற்போது கமல்ஹாசன் புகழ் எட்டுத்திக்கும் பரவி வரும் நிலையில்,கோட் சூட் அணிந்து கெத்தாக விக்ரம் படத்தின் தீம் பாடலை போட்டு மாஸ் ஆக நடந்து வந்துள்ளார்,இந்த வீடியோவை தற்போது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.இந்த வீடியோ தற்போது நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.உலகநாயகன் ரசிகர்கள் கமல்ஹாசனை புகழ்ந்து கருத்துக்களை தெரிவித்து வீடியோவிற்கு லைக்குகளை கொடுத்து இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.இந்த வீடியோவில் கமல் மிக மாஸ் ஆக உள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in