வெளியாகியது DANUSH-ன் திருச்சிற்றம்பலம் படத்தில் இருந்து தாய்க்கிழவி பாடல்

இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் இரண்டாவது மகன் தனுஷ்.துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆகி இன்று ஹாலிவுட் வரை உயர்ந்திருக்கிறார்.இதற்கு இவரது கடின உழைப்பே காரணம்.பல வெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார் தனுஷ்.இவர் முன்னாள் மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் நடித்த 3 படம் இவருக்கு சினிமாவில் பெரும் திருப்பு முனையாக அமைந்தது.இப்படத்தில் இவர் பாடிய ஒய் திஸ் கொலைவெறிடி என்ற பாடல் மிக பெரிய அளவு பட்டிதொட்டி எங்கும் ஹிட் அடித்தது.இதனை தொடர்ந்து இவர் உலகம் முழுவதும் மிக பிரபலமாகினார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  மறைந்த ரசிகர் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் சொன்ன நடிகர் ஜெயம் ரவி

வெளியாகியது DANUSH-ன் திருச்சிற்றம்பலம் படத்தில் இருந்து தாய்க்கிழவி பாடல் 1

விளம்பரம்

தற்போது தமிழில் மட்டுமில்லாமல்,ஹிந்தி,ஆங்கிலம் என பல மொழிகளிலும் நடிக்க தொடங்கிவிட்டார்.மேலும் முதல் முறையாக தெலுங்கு படத்திலும் களம் இறங்கி உள்ளார்,தெலுங்கில் சார் எனும் படத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில் யாரடி நீ மோகினி படத்தின் இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் பல ஆண்டுகளுக்கு பிறகு திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்துள்ளார்.இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார் .சன் பிக்சர் நிறுவனம் இப்படத்தினை தயாரித்துள்ளது.இப்படத்தில் இவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நித்யா மேனன் ஆகியோர் நடித்துள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  90ஸ் தமிழ் நடிகர்கள் மற்றும் நடிகைகள் உடன் உணவருந்த சென்ற சுஹாசினி

வெளியாகியது DANUSH-ன் திருச்சிற்றம்பலம் படத்தில் இருந்து தாய்க்கிழவி பாடல் 2

விளம்பரம்

இன்று இப்படத்தின் முதல் பாடலான தாய் கிழவி எனும் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.முதல் பாடலே ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.இந்த பாடலை நடிகர் தனுஷ் எழுதி பாடியுள்ளார்.தற்போது இந்த பாடல் இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.தனுஷ் ரசிகர்கள் இந்த பாடலுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து படம் எப்பொழுது வெளியாகும் என காத்து கிடக்கின்றனர்.இப்படம் ஆகஸ்ட் மாதம் 18 ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.இதனால் தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர்

கட்டாயம் படிக்கவும்  58வயசில் 25 வயது பெண்ணை போல கலக்கும் நடிகை நதியாவின் அழகிய புகைப்படங்கள்

விளம்பரம்

Embed video credits: SUNTV

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment