The Indian Times

அமீர் மாமா நீங்க தான் உலகம்.. ROMANCE-ல் சினிமாவுக்கே TOUGH கொடுக்கும் அமீர் மற்றும் பாவனி

பிக் பாஸ் சீசன் 5 ல் போட்டியாளராக பங்குபெற்றவர்கள் அமீர் மற்றும் பாவனி.இவர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பழகிய விதம் அனைவருக்குள்ளும் இவர்கள் காதலிக்கின்றார்களோ என்ற எண்ணத்தினை உருவாகியது.இதுகுறித்து பாவனியிடம் கேட்டதற்கு அவர் இல்லை என்று மறுத்துவிட்டார்.ஆனால் அமீர் பாவனியை காதலிப்பதாகத்தான் கூறி வருகிறார்.பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து இதற்கு ஒரு முடிவே இல்லாமல் இந்த காதல் கதை சென்று வருகிறது.

இருவரும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2 என்ற நடன நிகழ்ச்சியில் நடனமாடி டைட்டிலயும் வெற்றிபெற்றனர்,அமீரின் காதலை ஒருவழியாக பாவனி ஏற்றுக்கொண்டார்.இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளனர்.இருவரும் அடிக்கடி வெளியே சென்று எடுக்கும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

Advertisement

தற்போது காதலர்களாகிய இவர்கள் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.அங்கு இருவரும் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார் அமீர் அதன்படி தற்போது அவர்கள் இருவரும் ரொமேன்டிக் ஆக எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் இருவருக்கும் எப்பொழுது திருமணம் என கேட்டுக்கொண்டு வருகிறார்கள்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in