The Indian Times

பிக் பாஸ் தனலக்ஷ்மியின் வெறித்தனமான நடிப்பில் வெளிவந்த ALBUM SONG

பிக் பாஸ் 6வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ளவர் தனலட்சுமி. சாதாரணமாக செல்போன்களில் வீடியோ செய்து இன்று உலக மக்களின் பார்வைக்கு தனது கடின உழைப்பினால் வந்துள்ளார்.இந்த நிகழ்ச்சியில் இவருக்கு ரசிகர்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்று தான் கூற வேண்டும்.கமல்ஹாசனே தனலக்ஷ்மிக்கு ஆதரவாக குறும்படத்தினை போட்டு காண்பித்துள்ளார்.இருப்பினும் அவர் செய்த தவறுகளையும் சுட்டிக்காட்டியுள்ளார் கமல்ஹாசன் . வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

ஆரம்பத்தில் டிக் டாக் வீடியோ செய்து வந்த தனலட்சுமி பின்னர் நடிக்கவும் தொடங்கினார்.இருப்பினும் இவருக்கு ஓரளவுக்கு வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வாய்ப்பு தனலட்சுமியை சென்றடைந்தது. இதன் மூலம் அதிக பிரபலம் ஆகிவிடலாம் என வாய்ப்பினை ஒத்துக்கொண்டு பிக் பாஸ் சீசன் 6ல் போட்டியாளராக கலந்துகொண்டு தனது முழு திறமையையும் காண்பித்து விளையாடி வருகிறார்

Advertisement

இந்நிலையில் இவர் சான் ரோல்டன் இசையில் பறை எனும் ஆல்பம் பாடலில் நடித்துள்ளார்.இப்பாடல் வெளிவந்து 8 மாதங்களுக்கு மேல் ஆகிய நிலையில் இப்பாடலில் தனலட்சுமி நடித்திருப்பதை அறிந்துகொண்ட ரசிகர்கள் இப்பாடலை மீண்டும் சென்று பார்த்து ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்.பாடலில் தனலட்சுமி தனது அபார நடிப்பில் அசத்தியெடுத்துள்ளார்.பெருமளவு ரசிகர்களால் இவரது நடிப்பு பாராட்டப்பட்டு வருகிறது.

Embed video credits : Think Music India

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in